காதல் பிரிவின் அவஸ்தைகள்

அன்பேயுனது அரைநொடி பிரிவும்-எனக்கு
அமிலத்தின் அவஸ்தையடி..
ஆயுள்முழுதும் பிரிந்தென்னை ஆளில்லா
அமிலத்தீவில் அடைத்ததேனடி?
அக்கணம் முதல் இக்கணம் வரை
தனிமையே தவமானது
தவிப்புகளே வரமானது
மொழிமறந்து ஊமையானேன்
வழிமறந்த பறவையானேன்
வலுவிழந்த புயலானேன்
வாழ்விழந்த துறவியானேன்
பிரிவென்னும் பிணந்தின்னி கழுகென்னை
பிரித்து தின்கின்றது..!!
இரவுநேர இச்சைத்தீயில்-என்
இளமையெல்லாம் பற்றியெரிகின்றது..!!
உள்ளங்களை வேட்டையாடி
உணர்வுகளை உசுப்பேற்றி
உயிருக்கு உலைவைக்கும்
வித்தைதான் காதல் என்று இப்போது புரிகின்றது..!!
அமைதித்தீவில் நீ இருக்க..
அமிலத்தீவில் நான் இறக்கின்றேன்... --அருணன் கண்ணன்.

எழுதியவர் : அருணன் கண்ணன் (30-Mar-18, 9:53 am)
பார்வை : 1574

மேலே