கொல்லிமலை ரகசியம்
கொல்லிமலை ரகசியம்
(கதையில் வரும் வரலாற்று முழுக்க உண்மை.
கொல்லிமலையை அரசாண்ட அப்போதைய மன்னன் ஓரி மீது பெருஞ்சேரல் இரும்பொறை போரிட்டு வென்றான். அதை கொஞ்சம் எனது கற்பனை சேர்த்து எழுதிருக்கிறேன், மேற்கண்ட செய்தி உண்மை ஆனால் இக்கதையில் வரும் சம்பவங்கள் முழுக்க எனது கற்பனையே இக்கதை தொடர்பாக உதவிய கூகிள்க்கும் அதில் கொல்லி மலை தொடர்பான விவரங்களை பதிவேற்றிருந்த நண்பர்களுக்கும் நன்றி)
அன்று கிபி 2௦௦ கொல்லிமலை :
டம் டம் டப், டம் டம் டப் - அதிர்ந்து கொண்டிருந்தது முரசு. எங்கும் கொல்லு, குத்து, வெட்டு, கூச்சல்கள், வாள்கள் ஒன்றுடன் ஓன்று உராயும் சத்தங்கள் அதனால் சதை கிழிந்து ஐயோ, அம்மா, ஆ.. மரண ஓலங்கள்..
போர்...
பெரும் போர்...
பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் கொல்லி மலை அரசன் ஓரிக்கும். இருபடைகளும் உக்கிரமாக மோதிக்கொண்டது..
இரும்பொறை படையில் தொடர்ந்து பெருத்த இழப்புகள். ஓரியின் படைகள் மந்திர படைகள் போன்று செயல்பட்டது. அந்த அடர்ந்த கானகத்தில் ஓரிப்படை வீரர்கள் எங்கிருந்து தாக்குகிறார்கள் என்றே தெரியாத திகைப்பு.. எதோ ஒரு அடர்ந்த மரத்தில் பின்புறத்தில் இருந்து திடிரென தோன்றி நாசம் விளைவித்து விட்டு வந்த வேகத்திலே மறைந்து போனார்கள்.
போதாத குறைக்கு மலை மீதிருந்து புயல் வேகத்தில் வந்து தாக்கும் அம்புகள், மலை மீதிருந்து தரை நோக்கி எய்யப்படும் அம்புகள் பலம் பொருந்தியவை. நானிலிருந்து விடுபட்டு இரும்பொறை படைகளை நிர்முலம் செய்துகொண்டிருந்தன ஆ அதோ அம்பு என கூறி கூறிமுடிக்கும் முன் அவ்வீரனை அம்பு தாக்கி இருந்தது அத்தனை பலம் பொருந்தியதாக அம்புகளின் வேகம் இருந்தது...
வல்வில் ஓரி வீரர்கள் என்றால் சாதரணமா..? ஒரே அம்பில் சிங்கம், கரடி, காட்டுபன்றியை கொன்றவனாயுற்றே ஓரி மன்னன் அதனால் தானே அவனுக்கு “வல்வில் ஓரி” சிறப்பு பேர் வந்தது, அப்படிபட்ட மன்னனின் வீரர்களின் அம்பு விடும் திறன் பற்றி சொல்லவா வேண்டும்.??
அக்கொல்லி மலை வீரர்கள் விடும் அம்புக்கு கொஞ்சம் கொஞ்சமாக இரும்பொறை படை இழப்பை சந்தித்துக்கொண்டிருந்தது போதாத குறைக்கு மறைந்திருந்து தாக்கும் வீரர்கள் வேறு.
இரவு..
கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி..
இரும்பொறை படைவீடு..
கூடாரத்தின் வெளியே அங்கங்கே தீவட்டிகள் எரிந்து கொண்டிருக்க கூடாரத்தின் நான்கு பாகமும் காவலர்களால் சூழப்பட்டு கிடந்தது சற்று தொலைவில் வீரர்களின் கூடாரங்கள் வெட்டுப்பட்டு, உடலுறுப்பு இழந்து காயமுற்று கிடந்த வீரர்களின் வலி மிகுந்த முனகல்கள் அந்த இரவின் நிசப்தத்தை குலைத்துக்கொண்டிருந்தது. கூடாரத்தில் குறுக்கும் நெடுக்குமாய் ஆவேசமாக நடந்து கொண்டிருந்தான் இரும்பொறை. மன்னனின் கோபம் கண்டு நடுங்கி போய்க்கிடந்தார்கள் படைதளபதிகள்..
எப்படி.. எப்படி சாத்தியமிது? நம்மிடம் அதிக வீரர்கள் இருந்தும் எண்ணிகையில் குறைவான எதிரிப்படை வீரர்களை ஏன் இன்னும் வெல்ல முடியவில்லை ஏன் நம்மிடம் இவ்வளவு நாசம்.? கேவலம் ஒரு குறுநில அரசனிடமா நாம் இழப்புகளை சந்திப்பது.? ம்ம்ம்ம்.... யாரேனும் வாய்திறந்து நாவசையுங்கள்.
மன்னனா சரியான பாதைகள் இல்லாததால் நமது குதிரைப்படை முன்னேருவதில் தாமதமும், காடுகளில் மலைப்பாங்கான இடங்களில் போரிட்டு பழக்கம் இல்லாத வீரர்களுமே காரணம்.
மேலும், ஓரி படையின் வீரர்களின் மறைந்திருந்து தாக்கும் உத்தியும், அவர்களின் வில் படையின் இலக்கு தவறாத குறியும் தான் காரணம்..
சீ... எதிரி படையின் புகழ் பாடவா நான் உங்களை அழைத்தேன் ம்ம்ம்...
இரும்பொறை உறுமினான்..
தலைநகரில் இருந்து இன்னும் அதிக படைகளை தருவியுங்கள் ஒற்றர்களை மலை முழுக்க அனுப்பி தகவலை சேகரியுங்கள் அகப்படும் எதிரி படை வீரர்களை கண்டந்துண்டமாக வெட்டி எறியுங்கள் அகப்படும் எவரையும் விட வேண்டாம் ம்ம்ம்ம்.. சொல்லிவிட்டு சரேலென தனது கூடாரம் நோக்கி நடந்தான் இரும்பொறை..
இன்று 2௦18 கொல்லிமலை :
கிழக்கு தொடர்ச்சின் மலையின் கடைசி மலை கொல்லிமலை,
இயற்கை வளம் கொழிக்கும் இடம். பக்கத்தில் கேரளாவின் செழிப்பிற்கு மேற்கு தொடர்ச்சிமலை காரணமாக இருக்க தமிழ்நாட்டில் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கும் ஒரே மலைத்தொடர். மலைத்தொடர் என்ற பெயருக்கேற்ப தொடர்ந்து இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை துண்டு துண்டாக கிடக்கிறது.. ஆனாலும் எல்லை இல்லா ஆச்சரியங்களைம் மர்மங்களையும் தன்னுள்ளே புதைத்து கிடக்கிறது..
மலைப் பாதையில் விரைந்து கொண்டிருந்தது அந்த கார். காரின் உள்ளே அமர்ந்து காரினை செலுத்திக்கொண்டிருந்தார் ப்ரொபசர் ருத்ரா பின்னே இருப்பவர்கள் அருணும் வருணும்..
என்ன வருண் அப்படி பாத்துட்டு இருக்கிங்க ரெண்டு பேரும்.? என்றார் ருத்ரா சாலையில் கவனத்தோடு..
இயற்கை காட்சிகளை பாத்துட்டு இருக்குறது ஒரு ஆச்சரியாமான அனுபவம் தான ப்ரோபோசர்.. ஆனா இவ்வளவு அழகான பாரஸ்ட இப்போ தான் பாக்குறேன் என்றான் அருண்
அவப்போது மலைகளையும் சாலைகளையும் கவனித்துக்கொண்டிருந்த வருண் என்ன ப்ரோபோசர் இது அஞ்சு நிமிசத்துக்கு ஒருதடவை வளைவு வருதே என்றான் ஆச்சரியத்தோடு..
எஸ் வருண் இந்த மலைல மட்டும் சுமார் எழுபது கொண்டை ஊசி வளைவு இருக்கு. சோ, ரொம்ப கவனமா ஓட்டலான கரணம் தப்பினா மரணம் கதைதான்.. பழக்கம் இல்லாத டிரைவர் இங்க வண்டிய ஓட்டுறது கஷ்டம்..
நீங்க இதுக்கு முன்னாடி இங்க வந்துருகிங்களா ப்ரோபோசர்..?
எஸ் அருண் ஆராய்ச்சி சம்மந்தமா அடிக்கடி இங்க நான் வந்துருக்கேன் இது பத்தாவது தடவ முதல் தடவ இங்க வந்தப்போ இந்த மலை எப்படி என்னை ஆச்சரியபடுத்துச்சோ அதே மாதிரித்தான் இப்பவும் என்ன ஆச்சரியபடுத்திடே இருக்கு..
அதென்ன கொல்லிமலை ப்ரோபோசர் அருண் கேட்டான்..
கொல்லி அப்படிங்குற ஒரு மரம் வகை இங்க முன்னாடி நிறைய இருந்ததாகவும் அதனால இந்த மலைக்கு கொல்லிமலைன்னு பேர் வந்ததுன்னு சொல்வாங்க இன்னொன்னு கொள்ளிவாய் பறவைகள் நிறைய இருந்ததாகவும் அதனாலும் இந்த மலைக்கு கொல்லி மலைன்னு பேர் வந்துச்சு.. ஆனா மூனாவதா ஒன்னு சொல்றாங்க அதுதான் சொல்லபடுறதுலையே கொஞ்சம் வினோதமான விஷயம்..
என்ன அது.? ஆர்வமாய் கேட்டான் வருண்.
அது கொல்லிப்பாவை ..!!
அன்று கிபி 200 கொல்லிமலை :
ஓரி மன்னனின் அரண்மனை...
முன்று புறமும் பள்ளத்தாக்கான ஒரு இடம் ஒருபக்கம் அரண்மனைக்கு வரும் வழி என்று ஓரியின் அரண்மனை அமைப்பு இருந்தது ஓரி அரண்மனைக்கு வரும் வழி என்பது ரகசியமானது. நன்கு பழக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரும் அரண்மனைக்கு வந்துவிட முடியாது.. தூரத்தில் இருந்து பார்த்தாலும் இப்படி ஒரு அரண்மனை இருகிறதும் தெரியாது.. எனவே காட்டில் புதிதாய் நுழையும் யாரும் அரண்மனையை கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம்..
அரண்மனை கொலு மண்டபம்..
அரசனின் இருக்கையில் கம்பிரமாய் அமர்ந்திருந்தான் ஓரி. போர் நடந்து கொண்டிருப்பதை ஒட்டி அவசரமாக அனைத்து படைத்தளபதிகளும் அமைச்சர்களும் கூடிருந்தனர்..
ஓரி பேச ஆரமித்தான், தளபதியரே போரின் தற்போதைய நிலவரம் என்ன..?
வேந்தே இரும்பொறை படைகள் தொடர்ந்து முன்னேற இயலாதவாறு நமது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.. இப்பொழுதுவரை சூழல் நமக்கு சாதகமாய் அமைந்திருக்கிறது..
கொல்லிமலை வீரர்களை கிள்ளு கிரை என நினைத்து விட்டாயா இரும்பொறை.? உனக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன் பார் ஓரி முகத்தில் புன்னகை, தனது மீசையை முறுக்கி விட்டுக்கொண்டான்..
தளபதி இரும்பொறை படைகளுக்கு தரை தளத்தில் போரிட்டு தான் பழக்கம்.. மலை தளத்தில் போரிட்டு பழக்கம் இல்லை. இது இரும்பொறை படைகள் இன்னும் முன்னேற இயலாததிலே தெரிகிறது முழுக்க இது நமக்கு சாதகமான அம்சம். எதிரி படைகள் தொடர்ந்து மலைகளுக்கு ஏறவிடாமல் செய்யுங்கள்.. அடிவாரத்திலேயே அவைகள் தோல்வி அடைந்து செல்ல வேண்டும் அதற்க்கு ஆவண செய்யுங்கள்..
உத்தரவு வேந்தே..
முற்றுக்கை பல மாதங்கள் தொடர்ந்து நீடித்தது..
இரும்பொறை படைகள் தொடர்ந்து போரில் இழப்புகளையே சந்தித்து வந்தது அவர்களால் மலையை கைப்பற்றவே முடியவில்லை.. மலையை ஏற எத்தனிக்கும் சமயங்களில் எல்லாம் எங்கிருந்தோ தோன்றிய ஓரி வீரர்களின் கூரிய வாள்களும் அம்புகளும் இரும்பொறை படைகளின் உயிரை குடித்தன..
ஒருநாள்...
இன்று 2௦18 கொல்லிமலை :
என்ன சொன்னிங்க ப்ரோபோசர் கொல்லிபாவையா..?
எஸ் வருண் கொல்லிப்பாவை தான்..
அப்படினா என்ன ப்ரோபோசர் -அருண்
கொல்லிபாவைன்குறது ஒரு பதுமை அதாவது ஒரு சிலை, அந்த காலத்துல இங்க வாழ்ந்த சித்தர்கள் தங்களோட தவத்துக்கு இடைஞ்சல் வராமலும் இந்த காட்டுக்கு எந்த ஆபத்தும் வராமலும் இருக்க ஒரு சிலை செஞ்சு தர சொல்லி தேவ சிற்பி மயன் கிட்ட கேக்க அவனும் பார்க்க அசல் பொண்ணு போலவே இருக்குற ஒரு சிலையை வடிச்சு கொடுத்தான்.. அதோட சிறப்பே அது நகர கூடிய அசைய கூடிய சிலைன்குறது தான்.. சித்தர்கள் அந்த சிலைக்கு பல சக்திகள் கொடுத்தாங்க
ஒரு குறிப்பிட இடத்துல அத நிர்மானிச்சங்க.. கெட்ட நோக்கத்தோட வனத்துல நுழைஞ்ச யாரும் அது பக்கம் போய் நின்னா அது சிரிக்கும்,
அது சிரிக்கிற சத்தம் கேட்ட யாரும் அதுல மயங்கி போய்டுவாங்க அப்புறம் அந்த சிலை அவங்கள அழிச்சிடும். அதோட பேர் தான் கொல்லிப்பாவை, கொல்லிப்பாவை இருக்குற மலைனங்குறதால இந்த மலை கொல்லி மலைன்னு பேர் வந்தது இங்க வசிக்கிறவங்க இந்த கொல்லிபாவைய எட்டுக்கை அம்மன் இல்ல எட்டுக்கை காளி அப்படினு சொல்றாங்க...
வாவ் பென்டாஸ்டிக்.. ஒரு மலைக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா என்றான் வருண்..
நோ வருண் இது கதை இல்ல நடக்குற நடந்துட்டு இருக்குற நிஜம் இப்பவும் கெட்ட நோக்கத்தோட வனத்துல நுழைறவங்கள கொல்லிப்பாவை கொல்லுதுன்னு இந்த பகுதி மலைவாழ் மக்கள் நம்புறாங்க...
ப்ரோபோசர் இந்த மலைவாழ் மக்கள் தான் அறியாமைல இத நம்புறான்கன்னா நாமளுமா நம்பனும்..? -அருண்
நம்பிக்கைங்குறது அவங்க அவங்க மனச பொறுத்தது அருண். ஓகே இடம் வந்துருச்சு இறங்கலாம் என்றபடியே காரை நிறுத்தினார் ப்ரோபோசர் ருத்ரா
அருண் வருண் இருவரும் சுற்றுப்புற சூழ்நிலையில் மனதை பறிகொடுத்து நின்றிருக்க, சற்று தூரத்தில் ஒரு கோவில் இருந்தது..
அது என்ன கோவில் ப்ரோபோசர்.?
அதுதான் அரைபள்ளிஸ்வரர் கோவில் அருண் கிட்டதட்ட 1800 வருட பழமையான கோவில்..
அருணும் வருணும் ஆச்சரியமாய் அதை பார்த்துக்கொண்டிருந்தனர். சற்று தூரத்தில் சோவென அருவி சத்தம்..
இங்க பக்கத்துல எங்கையோ அருவி இருக்கு போல இருக்கே-வருண்
ஆமா இங்க பக்கத்துல தான் ஆகாச கங்கை அப்படிங்குற அருவி இருக்கு கிட்டத்தட்ட 160 அடி உயரத்துல இருந்து விழுந்துட்டு இருக்கு..
நாங்க போய் பார்த்துட்டு வரோம் ப்ரோபோசர்...
நோ வருண் நாம இங்க என்ன நோக்கத்துக்கு வந்தோம்ங்குரத நீங்க மறந்துட்டிங்கனு நினைக்கிறேன். நாம அதை முதலில் கவனிச்சு பின்னாடி இத கவனிக்கலாம் ஓகே ரெடி கார் டிக்கில இருக்குற பொருள்கள் எல்லாம் எடுத்துட்டு ரெடி ஆகுங்க..
ஓகே ப்ரோபோசர் என்றார்கள் ஏமாற்றத்துடன் இருவரும் பேக்குகளை தோளில் மாட்டிக்கொண்டார்கள்
நாம இப்போ எங்க போறோம்..??
கொல்லிப்பாவை கோவிலுக்கு..!!!
அன்று கிபி 200 கொல்லிமலை :
இரும்பொறை கூடாரம்...
டமிரென கிழே விழுந்து கூடாரத்தின் எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தது அந்த கோப்பை. விழுந்த அந்த கோப்பையை வெறுப்புடன் பார்த்தான் இரும்பொறை வேந்தன். தனது கனவுகள் ஆசைகள் எல்லாம் கிழே விழுந்து தன்னை கண்டு நகைப்பது போல உணர்ந்தான் தனது படைகள் இம்மியளவு கூட நகராமல் இருப்பதைக்கண்டு, நகர விட்டாமல் சாதுர்யத்துடன் போரிடும் ஓரி படையின் தீரதைக்கண்டு மனம் கொதித்தான்..
அப்பொழுது கூடராத்தில் நுழைந்த தளபதி ஒருவன்
வேந்தே....
என்ன.? என்றான் வெறுப்புடன்.
நாம் ஒற்றறிய அனுப்பிய ஒற்றன் ஒரு தகவல் கொண்டு வந்துள்ளான்..
என்ன தகவல்..?
அதை தங்களிடம் மட்டுமே சொல்லவேண்டும் என்கிறான்..
வர சொல்லுங்கள்...
முதுகு வளைத்து உள் நுழைந்த ஒற்றன் மன்னனை பணிவுடன் வணங்கினான்...
வேந்தே ஒரு முக்கியமான செய்தி..
என்னவென்று சொல்...
ஒற்றன் சொல்ல தொடங்கினான். சொல்லச் சொல்ல இரும்பொறை முகத்தில் புன்னகை...
பௌர்ணமி நிலவு..
மலைப்பாங்கான அந்த பகுதியில் தீவட்டிகள் பிடித்துக்கொண்டு சிலர் பாதை காட்டியபடி முன்னாள் சென்று கொண்டிருந்தனர்..
பின்புறத்தில் சிலரோடு நடந்து கொண்டிருந்தான் ஓரி..
மன்னா போர் நடந்து கொண்டிருக்கும் இந்த சுழலில் தங்கள் இப்படி கிளம்பிருப்பது சற்று வேதனை அளிக்கிறது..
தாங்கள் எல்லாம் இருக்கும் பொது எனகென்ன கவலை அமைச்சேரே. மேலும் ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி அன்று கொல்லிபாவையை தரிசித்து வணங்காமல் இருந்ததில்லை என்பது தான் உங்களுக்கு தெரியுமே..
ஆனாலும் வேந்தே போர் நின்ற பின் தரிசிக்கலாமே, மலையை சூழ்ந்து எதிரி படைகள் இருக்கும் இந்த நேரத்தில் தங்கள் இவ்வாறு கிளம்பிருப்பது ஏதேனும் ஆபத்தில் சென்று விட்டால் என்ன செய்வது.?
பயம் தேவை இல்லை அமைச்சேரே கொல்லிப்பாவை அம்மன் இருக்கும் வரை எனக்கும் இந்த வனத்துக்கும் ஒரு தீங்கும் வர போவதில்லை. ஓரி சொல்லிக்கொண்டிருக்கும் போதே கோவில் வந்து விட்டது..
மன்னனின் பாதுகாப்பை உத்தேசித்து ஏற்கனவே பூசாரி அங்கு எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருக்க, மன்னன் வந்ததும் கொல்லிப்பாவை அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ஓரி பக்தி பரவசத்துடன் அம்மனை வணங்கினான்...
உன்னை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ஓரி..
எல்லோரும் குரல் வந்த திக்கை நோக்க இரும்பொறை நின்று கொண்டிருந்தான். அதே நேரம் இரும்பொறை படைகள் அவர்களை நாற்புறமும் சூழ்ந்தது...
இன்று 2018 கொல்லிமலை :
கொல்லிப்பாவை கோவிலுக்கு என்றார் ருத்ரா..
அது எங்க இருக்கு.?- அருண்
அறைபள்ளிஸ்வரர் கோவிலுக்கு மேற்கு பக்கமா இருக்கு போகலாமா..??
எல்லோரும் நடக்கதுவங்கினார்கள்..
ப்ரோபோசர் ஒரு நிமிஷம்.. வருண் அவசர அவசரமாக மரத்துக்கு பின் ஒதுங்கினான்..
யாரும் பார்க்கவில்லை என்பதை தீர்மானித்து தனது பைக்குள் இருந்து வயர்லெஸ் போனை எடுத்தான்..
ஹலோ நாங்க கிளம்பிட்டோம்..
ஏன் அருண் வருண் அங்க என்ன பண்ணிட்டு இருக்கான்..?
என ருத்ரா கேட்டுக்கொண்டிருக்கும் போதே வருண் வந்து கொண்டிருந்தான்..
எங்க போன வருண்..??
அர்ஜெண்டு.. வருண் தனது சுண்டு விரலை காமித்தான்
சரி சரி கிளம்புங்க..
சரிவுகளில் இறங்கி நடக்க துவங்கினார்கள். வழியெங்கும் பல்வேறு பழங்கள் பூக்கள் காய்த்திருந்தன.. அருணும் வருணும் பறித்து தின்று கொண்டும் தேவையாவற்றை சேகரித்துக்கொண்டும் வந்தனர். இதெல்லாம் காடுகளில் அட்வேஞ்சேர் செல்பவர்கள் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம். கொண்டு வந்த உணவு பொருள்கள் திடிரென தீர்ந்து விடும் பட்சத்தில் இப்படி செய்வது தற்காலிகமாக உணவு தேவையை குறைக்கும்..
ப்ரோபோசர் நாம இப்போ நாம எதுக்காக கொல்லிபாவையை பாக்க போறோம்-அருண்
நாம அங்க போறது ஆராய்ச்சி சம்மந்தமா மட்டும் இல்ல என்னோட தனிப்பட்ட தேடலும் இருக்கு கிட்டதட்ட என்னோட பத்து வருட தேடல்..
என்னது அது ப்ரோபோசர்..? என்றான் வருண் ஆர்வமாய்..
அது கிபி 200 போல வாழ்ந்த ஒரு மன்னனோட கல்லறை..
யார் அது..?
வல்வில் ஓரி
அன்று கிபி 200 கொல்லிமலை :
நாட்புறங்களிலும் சூழ்ந்து கொண்ட இரும்பொறை படைகளை கண்டு ஓரி வீரர்கள் வாட்களை உருவிக்கொண்டு தாக்க ஆரமித்தார்கள்..
நிறுத்துங்கள் என்றான் ஓரி..
அனைவரும் சண்டையிடுவதை நிறுத்தி ஓரியை பார்த்தார்கள், ஓரி இரும்பொறையை தனது கூரிய விழிகளால் நோக்கினான்.
இது தான் போர் தர்மமா இரும்பொறை..? சூரியன் மறைந்த பின் போர் புரிவது கூடாதென்பது மன்னன் உனக்குமா புரியவில்லை..?
ஹா ஹா ஹா ஹா என குரூரமாய் நகைத்தான் இரும்பொறை, நியாய அநியாங்களை என்றோ கடந்து விட்டேன் ஓரி, போர் தர்மம் என்பது வசதிக்கேற்ப திருத்திக்கொள்வது தான், மரியாதையாய் சரணடைந்து விடு ஓரி இல்லையேல் உன் உயிரை இழப்பாய்...
ம்ம்ம் யார் உயிரை இழக்க போகிறார்கள் என்பது சற்றே தெரிந்து விடும் இரும்பொறை வா போர் புரிவோம் நம் பேர் சொல்லி அப்பாவி வீரர்கள் உயிர் இழப்பதை நான் விரும்பவில்லை வா உனக்கும் எனக்குமாக இருக்கட்டும் யுத்தம்.. சொல்லிவிட்டு தனது வாளை உருவிக்கொண்டே இரும்பொறை முன் நின்றான் ஓரி..
இரும்பொறையும் தனது வாளை உருவிக்கொண்டு பாய்ந்தான்..
இருவாள்கள் மோதிக்கொண்டன இரு மின்னல்கள் மோதிக்கொண்டன,
டன்.. டன்.. இருவரும் லாகவமாய் வாளை சுழற்றினார்கள் வாள்களில் தீப்பொறிகள் பறந்தன நேரம் ஆக ஆக இரும்பொறை சோர்வடைய ஆரமித்தான், இதனால் கோபம் அதிகரிக்க இன்னும் வேகமாய் வாளை சுழற்றினான்.. ஓரி இரும்பொறை பலவினமாவதை உணர்ந்து கொண்டான் சரேலென பின்புறம் நகர்ந்து கொண்டு வசதியாய் நின்று கொண்டு வாளை கெட்டியாய் பிடித்துக்கொண்டான். ஓரி விலகி நின்று கொண்டதை கவனித்த இரும்பொறை மேலும் ஆவேசம் கொண்டு மேல் பாய்ந்தான். சட்டென்று விலகி கொண்டு இரும்பொறை வாளை தட்டி விட வாள் இரும்பொறை கை நழுவி தூர விழுந்தது..
கண்ணிமைக்கும் நேரத்தில் ஓரி வாள் இரும்பொறை கழுத்தில் இருந்தது..
மூடனே இப்பொழுது யார் வென்றதென்று புரிகிறதா.? நான் நினைத்தால் இக்கணமே உன் தலையை கொய்து விட முடியும் ஆனால் நான் போர் தர்மத்தின் படி நடப்பவன் திரும்பி போ போர்க்களத்திற்கு வா சந்திப்போம். சொல்லிவிட்டு திரும்பி நடக்க துவங்கினான்..
ஆத்திரத்தில் அறிவிலந்திருந்த இரும்பொறை பக்கத்தில் இருந்த வீரனின் ஈட்டியை ஓரியை குறி பார்த்து வீசினான்...
சீறிக்கொண்டு வந்த ஈட்டி சரியாக ஓரி முதுகில் பாய்ந்து மறுபக்கம் வந்தது... ஓரி துடிதுடித்து இறந்து விழுந்தான்..
சுற்றுபுறம் பெரும் நிசப்தத்தில் ஆழ்ந்தது, என்ன நடந்து என்று முதலில் யாருக்கும் புரியவில்லை...
திடிரென ஒரு தீவைக்க பட்டிருந்த அம்பு தரையில் விழுந்தது சட சடவென அம்புகள் வரிசையாக வர ஆரமித்தன இரும்பொறை படைகள் பயந்து பின்வாங்கி சற்றே விலகி போயினர்...
திரும்பி வந்து பார்த்த பொழுது ஓரியின் உடலைக் காணவில்லை..
மறுநாள் தலைவனை இழந்த கொல்லிமலை எளிதாக இரும்பொறை வசமானது..
தங்கள் மமன்னனை தகாத முறையில் கொன்ற இரும்பொறையை கொல்லிமலை மக்கள் ஊருக்குள் அனுமதிக்கவில்லை.. தனது சார்பில் தளபதி ஒருவனை அரசாட்சி செய்யவைத்து சொந்தநாடு திரும்பி போனான்..
இன்று 2018 கொல்லிமலை :
ஓரியின் கதையை சொல்லிமுடித்தார் ப்ரோபோசர் ருத்ரா..
அருணும் வருணும் பிளந்தவாயை மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்..
இரவாகிருந்தது.. தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கிருந்தனர்..
அப்போ அந்த ஓரி உடல் என்னாச்சு.?-அருண்
ஓரியோட உடலை அங்க வாழ்ந்துட்டு வந்த சித்தர்கள் கைப்பற்றி ஒரு குகையில் வச்சு அதோட விலைமதிக்க முடியாத பல ஆபரணங்களையும் நகைகளையும் வைரங்களையும் பல மூலிகை ஒலைசுவடிகளையும் ஒரு சமாதிக்குள்ள வச்சு புதைச்சுருக்கங்க..
அது மட்டும் இல்ல உண்மையான கொல்லிப்பாவை சிலையும் அங்க தான் இருக்கு.. இந்த குறிப்புகள் அடங்கிய சுவடிகளை இன்னொரு இடத்துல புதைச்சாங்க..
இந்த மலையுல பாக்சைட் அப்படிங்குற தனிமம் நிறைய கிடைக்கிறதா கண்டுபிடிச்சு அத எடுக்க குத்தகைக்கு விட்டாங்க. அப்படி அந்த தனிமம் எடுக்க குழி தோண்டினபோது கிடைச்ச ஒரு ஓலை சுவட்டில தான் மேற்கண்ட தகவல்கள் கிடைச்சது, பழங்களால தமிழ்ல எழுதபட்டிருந்த அந்த ஒலைசுவடில இருந்தத மொழிபெயர்க்க எனக்கு கிட்டத்தட்ட எனக்கு ஒரு வருட காலம் பிடிச்சது..
அப்போ கண்டிப்பா ஓரி சமாதி இங்க தான் இருக்குனு நம்புறிங்களா ப்ரோபோசர்..?-வருண்
நிச்சயமா இங்க தான் இருக்கு.. வேட்டைக்காரன் மலைல தான் இருக்கு.. அந்த மலை கிட்டத்தட்ட 1400 மீட்டர் உயரம் அங்க தான் எங்கையோ இருக்கு. எனக்கு முன்னாடி நிறைய பேர் இந்த புதையல தேடி வந்து காணாம போயிருக்காங்க. ஆனா அவங்களுக்கு அது எங்க இருக்குனு தெரியாது.. ஆனா நமக்கு கிடைச்ச குறிப்புகள் கண்டிப்பா அந்த சமாதி புதையல நம்ம கிட்ட சேர்த்துரும். சரி நேரம் ஆகிடுச்சு தூங்கலாம்..
மறுநாள், வேட்டைக்காரன் மலை...
அடேங்க்கப்பா இவ்வளோ பெரிய மலைல நாம அத எங்க போய் தேடுறது.?
முயற்சிய கை விட்டர கூடாது அருண் வாங்க தேடலாம்..
தேடல் கிட்டதட்ட நீண்ட தேடல்...
மலையின் உச்சி பகுதிக்கு வந்தார்கள்..
என்ன ப்ரோபோசர் இது எங்க தேடியும் சின்ன குறிப்பு கிடைக்கல..
அதான் எனக்கும் புரியல அருண்...
ஒருவேள நாம தப்பான இடத்துல தேடிட்டு இருக்கோமோ..?
அப்பொழுது கருத்து கிடந்த வானத்திலிருந்து மழைத்துளிகள் விழ வலுக்க ஆரமித்தன..
மை காட்..
என்னாச்சு ப்ரோபோசர்..??
மலைபங்கான இந்த இடத்துல அதுவும் மழைல இருக்குறது ஆபத்து வாங்க நாம பாதுக்காப்பான இடத்துக்கு போவோம்...
டமீர்.. கண்ணை பறிக்கும் வெளிச்சத்தில் மின்னல் அவர்கள் பக்கத்தில் விழுந்தது. மழையால் ஈரமாகி போயிருந்த மண்ணால் அனைவரும் நிலை தடுமாறி சரிவில் வழுக்கி விழுந்தனர் சரிவில் அப்படியே உருள ஆரமித்தனர்.. மரம் கல் எல்லாம் அவர்களை காயபடுத்த சரிவை நோக்கி உருண்டு போய்க்கொண்டிருந்தனர்.. ஒரு கட்டத்தில் சரிவு முடிந்து போன நேரத்தில் அருவி பள்ளத்தில் தண்ணிரில் விழுந்தனர்
தண்ணிரை மீறி மேலே எழுந்து கரையை நோக்கி நீந்த ஆரமித்தனர்.
வருண், வருண் எங்கே..?
வருண் தண்ணிரில் நீச்சல் தெரியாமல் தத்ளித்துக்கொண்டிருந்தான்..
சடீரென அருண் தண்ணிரில் குதித்து வருணை கரையை நோக்கி இழுத்து வந்தான்..
அனைவரும் தங்களை ஆவசுதபடுத்திக் கொண்டனர்...
அருண் ருத்ராவை பார்க்க..
அவர் அருவியை கவனித்துக்கொண்டிருந்தார்..
ப்ரோபோசர் அப்படி என்ன பாக்குறிங்க..?
அருண் அங்க பாரு..??
எங்க..??
அதோ அந்த அருவி விழுந்திட்டு இருக்குற பாறைல பாரு..
அருண் உற்று கவனிக்க..
அருவி பாறையில் ஒரு வில் அம்பு சின்னம் செதுக்கபட்டிருந்தது..
அது என்ன ப்ரோபோசர் வில்அம்பு சின்னம்..?
அதே தான் நாம தேடி வந்த அடையாளக்குறிப்பு அதான் அப்போ இங்க தான் அந்த கல்லறை இருக்கு வாங்க போய் பார்ப்போம்...
அதை ஆராய ஆரமித்தனர்...
எங்கனு புரியலையே..
ப்ரோபோசர் ஒருவேள இந்த அம்பு காட்டுற திசையா அது இருக்கலாமோ..?
அம்பு காட்டும் திசையை கவனித்தார்கள் அம்பு அருவியை நோக்கி இருந்தது..
அம்பு அருவிய காட்டிட்டு இருக்கு..
அருவிய உற்று பார்த்துக்கொண்டிருந்தார் ருத்ரா..
அதோ அந்த அருவிய பாருங்க அந்த அருவி விழுற தண்ணிக்கு பின்னாடி எதோ தெரியுதுல வாங்க...
பாறைகளை ஏறி இறங்கி விரைவாக அதை நோக்கி நடந்தனர்..
தண்ணிரை கிழித்து கொண்டு தலையை உள் நுழைத்து பார்த்தனர்..
மைகாட் என்னால நம்பவே முடில உள்ள குகை மாதிரியான அமைப்பு இருக்கு, வாங்க உள்ள போய் பார்போம்..
குகைக்குள் நடந்தனர்
அதோ.. சமாதி அருண் கூவினான்..
விரைவாக சென்று ருத்ரா அதை திறக்க முயற்சி செய்தார்..
அருண் வா இங்க வருண் நீயும் வா இத நகர்த்துங்க..
அனைவரும் சேர்ந்து நகர்த்த மேல் கல் கொஞ்ச கொஞ்சமாக நகர்ந்தது..
ஆஆ... அனைவரும் வாயை பிளந்தனர் உள்ளே ஓரியின் எலும்புகூடு இருக்க அதன் அடியில் நகைகளும் வைரங்களும் சில ஓலைசுவடிகளும் மின்னியது..
கடைசில நாம சாதிச்சுடோம் பரவசத்தில் அருணை கட்டிக்கொண்டார் ருத்ரா...
யாரும் அசையாதிங்க...
ருத்ரா அருண் இருவரும் அதிர்ச்சியுடன் திரும்ப..
வருண் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தான்..
வருண் என்ன இது துப்பாக்கி..?
யாரும் பேச கூடாது அப்படி போய் நில்லுங்க...
வருண்..
ம்ம்ம்.. சொன்னா கேக்க மாட்டிங்க வருண் ட்ரிகரை அழுத்த டமிர் வருணின் துப்பாக்கி தோட்டாவை உமிழ்ந்து ருத்ராவின் தோள்பட்டையை துளைத்தது..
ஆஅ ருத்ரா அலறிக்கொண்டு கிழே சாய அருண் அவரை தாங்கி பிடித்தான்...
வருண் அவசரமாய் ஓரியின் கல்லறைக்கு சென்று நகைகளையும் வைரங்களையும் தனது பேக்கில் அள்ளி போட்டுக்கொண்டான். ஒலைசுவடிகளை கிழே எரிந்து பேக் ஜிப்பை மூடிக்கொண்டு ப்ரோபோசர் ருத்ராவின் அருகே வந்தான்..
கொள்ளிமலையுல இந்தமாதிரி புதையல் இருக்குராதா எங்களோட அமைப்பு எப்பையோ கண்டு பிடிச்சிருச்சு ஆனா புதையல் எங்க இருக்குனு எங்களுக்கு தெரியல நாங்களும் எவ்வளவோ பேர புதையல கண்டுபிடிக்க அனுப்புனோம்.. ஆனா எங்களால கண்டுபிடிக்க முடியல...
அப்போ தான் உங்களுக்கு புதையால கண்டுபிடிக்கிறதுக்கான குறிப்புகள் கிடைசுருக்குறதா எங்களுக்கு ரகசிய தகவல் வந்தது அதனால எங்களோட அமைப்பு என்ன தேர்ந்தெடுத்து உங்க கிட்ட மாணவனா அனுப்புச்சு நீங்களும் புதையல ஒருவழியா கண்டு பிடிசுட்டிங்க ரொம்ப நன்றி ப்ரோபோசர்..
டேய் துரோகி ருத்ரா ஆத்திரத்தில் உறுமினார்...
ஹா ஹா ஹா...
வருண் வயர்லெஸ் போனை எடுத்து தொடர்பு கொள்ள முயற்சித்தான்...
போன் சரிவில் உருண்டதில் நொறுங்கி போய் கிடந்தது...
ச்சே... ஒர்க் ஆக மாட்டேன்குது, ஓகே ப்ரோபோசர் எல்லாம் ஓவர்...
உங்களை இப்படியே விட்டு போறதுல எனக்கு விருப்பம் இல்ல ஒரிக்கு துணையா நீங்களும் இங்கயே சமாதியாகிடுங்க என்றபடியே துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டினான்...
அப்பொழுது...
ஹா ஹா ஹா ஹ்...
வருண் சுற்றும் முற்றும் பார்த்தான்..
யாரோ சிரிச்ச மாதிரி இல்ல..
ஹா ஹா ஹா..
ஏய் யாரது..??
ருத்ராவும் அருணும் குழப்பமாய் வருணை பார்த்துக்கொண்டிருக்க..
ப்ரோபோசர் உங்களுக்கு அந்த சத்தம் கேக்குதா..??
ஹா ஹா ஹா ஹா..
அருண் சொல்லு உனக்கு அந்த சத்தம் கேக்குதா..?
இல்ல எங்களுக்கு எந்த சத்தமும் கேக்கல..
ஹா ஹா ஹா ஹா ஹா...
அம்மாஆஆஆஆஆ.. வருண் தலையை பிடித்துக்கொண்டான்...
துப்பாக்கி கேளே விழுந்தது...
திடிரென வருண் உணர்ச்சியற்ற பதுமை போல ஆனான், அப்படியே நடந்து குகையின் மற்றொரு மூலைக்கு இயந்திரதனமாய் நடந்து போக, அருண் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வருணை பார்த்தான்..
வருண் சுவற்றில் இருந்த பெண் ஓவியத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்..
ப்ரோபோசர் அது அது..
நான் நினைக்கிறது உண்மையா இருந்தா அது தான் கொல்லிப்பாவை..
அருண் திகிலடனும் ஆச்சிரியத்துடனும் அதை பார்த்தான்...
அசையாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்த வருண் திடிரென திரும்பி வாசலை நோக்கி நடக்க ஆரமித்து அருவியில் விழுந்தான்...
எந்த அசைவும் இன்றி தண்ணிரை அபரிதமாய் குடித்து அருவியின் வெகு ஆழத்திற்கு போய்க்கொண்டே இருந்தான் அவனோடே அந்த புதையல் இருந்த பேக்கும்...
அருணும் ப்ரோபோசர் ருத்ராவும் திக்பிரமையில்லிருந்து மீண்டனர்.. திரும்பி அந்த ஓவியத்தை பார்க்க...
பேரமைதியில் இருந்தது கொல்லிப்பாவை என்ற அந்த ஓவியம்...
அருண் ருத்ராவை தாங்கி பிடித்துக்கொண்டு அவரை எழுப்பினான்...
ஆக கொல்லிபாவைன்குறது ஒரு ஓவியம்.. அது இருக்குறது மறுபடி உண்மையாகிடுச்சு...
ஆனா அந்த புதையல் போயிருச்சே ப்ரோபோசர்..
ஒரு ஆராய்ச்சியாளனுக்கு உண்மையான புதுதையல் எது தெரியுமா அருண் அதோ அந்த ஓலைசுவடி தான் அத எடு...
அருண் அதை எடுத்து பத்திரபடுத்திக்கொண்டான்..
திரும்பி அந்த ஓவியத்தை பார்த்தான்..
எல்லையற்ற ரகசியங்களை தன்னுள்ளே புதைத்த கொல்லிப்பாவை அமைதியாக இருந்தது...
நிறைவு
எழுதியவர்
-அருள்.ஜெ