© ம. ரமேஷ் லிமரைக்கூ 9
•இறைவன் சந்நிதியில்
இறைவனைவிடப் பெரிய பெரிய உண்டியல்
அதற்கு நான்கு நான்கு வாய்கள்
•கல்லை எடுத்தேன்
என்னைப் பார்த்து நாய் வாலாட்டியது
மனிதன் மீது எறிந்தேன்
•செய்தித் தாள்
செய்திகள் இல்லை திருப்பத் திருப்ப
நீச்சலுடையில் நடிகைகள்
•நான் சொர்க்கத்தில்
நுழைவதாய் நினைத்துத் துள்ளிக் குதித்ததில்
விழுந்தேன் நரகத்தில்
விழி முந்தியது
அதற்கு முன்பே ஆசை முந்தியதில்
வயிறும் முந்தியது