இடைவெளி
வேலை செய்த களைப்பால்
தூங்குவது அருமை
வேலையே செய்யாமல் சோம்பேறியாய்
தூங்குவதை விட...
பசித்துப் புசிப்பது ருசி
பசிக்காமல் ருசிக்குப் புசிப்பதை விட...
இடை இடையே திரைப்படம் செல்வது சந்தோஷம்
திரை அரங்கைக் குத்தகைக்கு எடுப்பதை விட...
இன்னும் இன்னும் என்னும் மனதை
இனிக்கச் செய்வது இயலாமை, முடியாமை...
ஆசையைத் தக்க வைக்க உதவுவது
இல்லாமை, கிட்டாமை...