நம்பிக்கை கைவிடல்

உந்தன் நம்பிக்கையாக நான்
உன்னருகில் இருக்க வேறு
ஏது வேண்டும் என்றுரைக்கும்
பலர் உள்ளும் தனக்கு
ஆக வேண்டிய காரியம்
ஆகச் சிறப்பாக நடந்தேறிய
பின்பு உள்ளும் மாற்றம்
கண்டு கைவிடுகையில்
அம்மாற்றமும் என்னுள்ளும் மாற்றம்
தருகிறது யாதொருவரையும்
நம்பாதே அதை மறந்தும்
இருந்து விடாதே என்று
வாயுரைத்தாலும் பாழ் மனதுக்
காது கேளாதது போல்
இருந்து மீண்டும் மீண்டும்
ஏமாற்றம் காண தயாராகிறது..!

எழுதியவர் : விஷ்ணு (3-Apr-18, 1:49 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 74

மேலே