பிள்ளைகளே இவர்கள்
சிறுமியாய் சிறுவனாய்
அவர்கள் சிரிப்பில்
அந்த கள்ளமில்லா
' விஷமச்சிரிப்பில்' எள்ளளவும்
பேதமில்லை , அதில்
விஷமம் தவிர விடம்
ஏதும் இருப்பதில்லை
கடவுளின் 'பிள்ளைகள்'அவர்கள்
சிறுமியாய், சிறுவனாய்
அவர்கள் பார்வையில்
'கள்ளம்'இருக்கு கருணை இருக்கு
'கள்' இருப்பதில்லை
கபடம் ஏதும் இருப்பதில்லை
கடவுளின் 'பிள்ளைகள்'அவர்கள்
சிறுமியாய், சிறுவனாய்
அவர்கள் பேச்சில்
ஒலிப்பதெல்லாம்
குழலாம் மழலை அதில்
பேதம் ஏதுமிலை
கடவுளின்'பிள்ளைகள், அவர்கள்
ஆணாய், பெண்ணாய்
வளர்ந்தபின்னே இவர்கள்
சிரிப்பில்,பார்வையில்,பேச்சில்
அத்தனையும் மாறுதே
இப்பவும் இவர்கள் கடவுளின்
பிள்ளைகளே , 'வளர்ந்த பிள்ளைகள்'
அவனையே மலைக்கவைத்த
பிள்ளைகள் ,ஏன் இவர்களை
இப்படி செய்துவிட்டேன் என்று
அவனுக்கே தெரியவில்லை!
எல்லாம் மாயமே