porumai

ஐம்பூதங்களான........
நிலம் பொறுமை இழந்தால்...
பூகம்பமாய் மாறி பசுமையாய்,
அழகாய் இருந்ததை அலங்கோலமாய் மாற்றும்...
நீர் பொறுமை இழந்தால்...
பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளமாய்
பெருக்கெடுத்து சுனாமியாய் மாறி பிணமாய் மிதக்க செய்யும்....
காற்று பொறுமை இழந்தால்...
சூறாவளியாய் சூழன்றடித்து சுவாசிப்பதை திணறச் செய்யும்....
நெருப்பு பொறுமை இழந்தால்...
தீச் சுவலையாய் மாறி எரித்து சாம்பலாக்கும்.......
ஆகாயம் பொறுமை இழந்தால்..
மழையாய் பொழிந்து வெள்ளக் காடாய் மாற்றும்...
இல்லையேல் வெயிலாய் காய்ந்து பாலைவனமாய் மாற்றும்......
இவை அனைத்தும் பிரிவின் வலியை உணரவில்லை......
நான் பொறுமை இழந்தால் என்னுள் இருக்கும்
நீ காயப்படுவாய் என்று எண்ணி அமைதியாகிறேன்.....
ஏன்னென்றால் உன்னை பிரிய விரும்பவில்லை...
கடந்த சில நாட்களாக உன் பிரிவின் வலியை உணர்ந்தேனடி...