கண்ணே

உன்னில் நான் கண்ட
அதிசயங்கள்...
சாரல் மழையை பொழியும் உன் ஈரக் கூந்தல்...
குங்குமதிற்கே அழகு சேர்க்கும் உன் படர்ந்த நெற்றி...
வானில் மிதக்கும் கருமேகங்களைப் போன்று
கருவிழிகளை கொண்ட உன் இரு கண்கள்..
தாமரை இதழ்களைப் போன்று
மிருதுவான உன் அழகிய உதடுகள்...
கண்டவுடன் குழந்தைகள் முத்தமிட
தூண்டும் அழகிய உன் இரு கன்னங்கள்..
பார்த்தவுடன் மனதைக் கவரும் உன் பார்வை...
இந்த அதிசயங்களைக் கொண்ட வசீகரமான
உன் முகத்தை மீண்டும் மீண்டும் காண
ஏங்குகிறது பெண்ணே.... என் மனம்......

எழுதியவர் : ஏழுமலை A (4-Apr-18, 12:40 pm)
Tanglish : kanne
பார்வை : 226

மேலே