காதலே நிம்மதி
சில்லென்ற குளிர்க் காற்று
சில்வண்டுகளின் ரீங்காரம்
குயில்களின் நாதஒலி
குரங்குகளின் மரச் சேட்டை
பூக்கள் மொய்த்த செடிகள்
பழங்கள் செழுத்த மரங்கள்
சலசலக்கும் நீரோடை
புழுதியில் புரண்டு
நீரில் விளையாடிக்
காதல் கொண்டு
கழிக்கும் மான்கள்
மரக்கிளையில் கிளிகள்
மறைந்தோடும் முயல்கள்,
கண்ணை நிறைத்துக்
கருத்தைக் கவருமிந்த
அழகான அந்தியிலே
ஆற்றங்கரை அருகே
பஞ்சணை மெத்தையிட்ட
பசும்புற் தரைமீது
உன்னோடு நானாக
என்னோடு நீயாக
அருகருகே நாமிருந்து
ஆகாயம் செல்வோமா ?
அகிலத்தை அக்கணமே
இருவருமே மறப்போமா ?
ஆக்கம்
அஷ்ரப் அலி