உனக்காக காத்திருக்கிறேன் எனக்காக வருவாயா

என் இரு விழிகளும் தவம் இருக்கிறதடா
உன் முகம் காண ..

விழியோடு விழி சேர்ந்து என் தவத்தினை
கலைத்துவிடு என்னவனே..

காத்திருக்கும் என் நிமிடங்கள் பொய்யாகி போகுமோ
உன்னவள் காத்திருக்கும் நொடிகள் தான் உனக்கு புரியவில்லையோ

உன்னை காணாத என் விழிகள் மூடமறுப்பதும் ஏனோ ..
தவித்திடும் பார்வை (பாவை)க்கு காட்சி தருவாயோ ..

உனக்காக காத்திருக்கிறேன் எனக்காக வருவாயா
என்னவனே ..

எழுதியவர் : roja (4-Apr-18, 3:26 pm)
பார்வை : 3436

மேலே