வருமா புரட்சி

இந்தியா...ஒரு புரட்சிக்கு காத்திருக்கிறது என்பது போன்ற சொல்லாடல் பயன்படுத்தாத பெருந்தலைகள் இல்லை என்றே சொல்லலாம். உலக அளவில் புரட்சி என்பதில் முக்கியமான 10 புரட்சிகள் சொல்லிவிடலாம். இவை அனைத்தும் Wikipedia, மற்றும் இணையம் தாராளமாக கிடைக்கின்றன.படித்து கொள்ளலாம்.
இந்தியாவில் புரட்சி என்பது பற்றி சில சந்தேகம் உள்ளது. முடிந்தால் பதில் சொல்லுங்கள். நான் எந்த தகவலும் குறிப்பும் முன் யோசனை இன்றியே இதனை பதிவு செய்கிறேன். நீங்கள் ஆதார பூர்வமாக சொன்னால் நன்றாக இருக்கும்.வெறும் ஒரு சாமானியனின் கேள்விதான்...
1. உலக அரங்கில் புரட்சி காலம் 2 முதல் 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்தது...இங்கும் இதுபோல் ஆண்டுக்கணக்கில் சாத்தியமா?
2.பெருமளவு மதம், ஜாதியால் நாம் ஆனவர்கள்...மதம் விடுத்து ஜாதி கணக்கில் கொள்வோம். இந்திய ஜாதிகள் அளப்பரியது. வெவ்வேறு பண்பாடு, கலாச்சாரம், அதற்கே உரிய கேளிக்கை, கொண்டாட்டம், களியாட்ட திருவிழா.... எப்படி மக்கள் இவைகளை தியாகம் செய்து புரட்சி என்ற ஒற்றை புள்ளியில் கூடுவர்.
3. இல்லை என்று சொன்னாலும் ஜாதி அடிப்படையில் மன மாச்சர்யம் நமக்கு உண்டு...அனைவருக்கும் அல்ல என்றும் ஒரு வரி வழக்கம் போல இருக்கட்டும்...அப்படி இருக்கையில் x ஜாதி கூப்பிட்டு y ஜாதி வந்து விடுமா...A ஜாதி சொல்லி B ஜாதி கேட்டுவிடுமா? கேட்கும் , வரும் என்று சொல்லும் அன்பர்கள் தாராளமாக அவை எந்த ஜாதி என்று கூறிவிடலாம்...ஒருமைப்பாடு விஷயம் தானே...
4. சிலர் வாகாக அறிவில் புரட்சி செய்து மாற்றம் காண்போம் என்று சொல்வர்...அறிவில் புரட்சி என்றால் என்ன...அது எல்லோருக்கும் எப்படி சம அளவில் பெருகி வரும்...சென்னை டாண் போஸ்கொ பையனும் வடுகப்பட்டி தேவதானப்பட்டி அரசு பள்ளி மாணவனும் அறிவில் புரட்சி செய்யும்போது என்ன பேசிக்கொள்வர்...
5.எல்லாம் மறந்து தீடிரென இந்தியாவே ஒன்று கிளம்பி புரட்சி வந்து விட்டால் அவர்கள் முக்கியமான தேவைகளை முன் வைக்கும்போது ஜாதி,மத அடிப்படைகளை முன் வைப்பரா அல்லது இந்தியன் என்ற கருத்தை மட்டும் கொண்டு அனைத்து இட ஒதுக்கீடு முறைகளையும் தியாகம் செய்து நவ இந்தியா படைப்பார்களா?
6.புரட்சிக்கு சற்றும் சாத்தியமில்லை என்னும்போது இந்தியா அதன் தலையாய பிரச்சினைகளை வேறு எப்படி தீர்க்க முடியும்? 7. ஊழல், லஞ்சம் உண்மையில் தீர்க்கவே முடியாத பிரச்சினையா...அல்லது அப்படி நமக்கு காட்டப்படும் பொய் காட்சிகளா?
8.மாபெரும் கொடு நோய்க்கு விஞ்ஞானம் சிறந்த தீர்வு தரும்போது ஒரு துணைவேந்தர் ஊழலை கண்டுகொள்வது அவ்வளவு கஷ்டமா?
9.அரசியல்வாதி சரி இல்லை என்றால் மக்களும் சரி இல்லை என்றுதான் அர்த்தம். இதில் நல்லவர் தேர்ந்து எடுப்பது எப்படி? யாருக்கும் நெற்றியில் நல்லவன் என்று எழுதி போடவில்லையே?30 வருடம் இந்த வசனம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
10. புரட்சி வராது...மாநிலம் புரட்சி செய்தால் மத்திய அரசு இறுதியில் ராணுவம் கொண்டு ஒடுக்கும் என்பது அறிந்த விஷயம்...ஆக வேறு என்னதான் வழி இந்தியா உய்ய...
11. ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி பேசவேண்டாம்...அந்த சீறும் சிங்கங்கள் இப்போது என்ன செய்கிறது என்ற கேள்வி வரும்...அது வெறும் கார்ப்பரேட் கலவரம். நன்றாக நடந்தது. முடிந்தது. இறுதிநாள் அடி வெளுக்கப்பட்ட மக்களே பாவம்...உண்மையான வீரர்கள்... இன்னும் ஒத்தடம் கொடுத்து கொண்டு இருப்பார்கள்... ஆரம்பித்து வைத்த சீமான்கள் (நாம் தமிழர் அல்ல) கார்களில் பறந்து கொண்டிருப்பார்கள்...
12.இதன் பின்பும் எப்படி வரும் புரட்சி? வந்தால் என்ன கேட்போம்? யாருக்கு என்பதை விட எந்த ஜாதிக்கு எவ்வளவு கிடைக்கும்? என்பதை தவிர்க்க முடியுமா? வெறும் சாமானியனின் சந்தேகமே.

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Apr-18, 12:30 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : varumaa puratchi
பார்வை : 492

சிறந்த கட்டுரைகள்

மேலே