அழகு எனது முதல் கவிதை என் மனைவியை பற்றி எழுதியது

அந்த வானுக்கு மதி அழகு
இந்த மதிக்கு சிரிப்பு அழகு
சிறார்களுக்கு பாடம் புகட்டுவதில்
இவளின் பேச்சு அழகு
கணவர் மீது யாரேனும் குறைகூறநேரிட்டல்
இவள் காட்டும் கோபமும் அழகு
விரைவாக இவள் சமைத்திட்டாலும்
அந்த உணவுத்தானில் சுவை அழகு
உண்மைபேசி இவளிடம் பழகிவிட்டால்
இவள் காட்டும் பாசமும் அழகு
மொத்தத்தில் என்னவளின் செயல்கள் யாவும்
பார் போற்றும் அழகோ அழகு

எழுதியவர் : மணிவேலன் (7-Apr-18, 5:57 pm)
சேர்த்தது : மணிவேலன்
பார்வை : 185

மேலே