எதை இழப்பாய் வேரையா இலையையா

வறண்ட காலத்தில்
மரங்கள் நிச்சயம்
தன் இலையை இழக்கும் !
ஆனால்...,
அது தன் வேரை இழக்காது !
தமிழா ! இன்று ..,
நீதான் மரம்
இது வறண்ட காலம் .,
எதை இழப்பாய் !?...
வேரையா..?! இலையையா...?!
வேரை இழந்தால் வீழ்ந்துவிடுவாய் .
இலையை இழ..!!
-துளிர்த்துக்கொள்வாய் !.

கேளிக்கையால் ,
வேடிக்கையால் ,
முட்டாளானது போதும் !.
உதிர்த்துவிடு இதுபோன்ற இலைகளை.,
உயர்த்திப்பிடி உனக்கான கொள்கைகளை.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (7-Apr-18, 3:28 pm)
பார்வை : 181

மேலே