உலகம்
நான் காகிதமாக இருந்த பொழுது
பட்டம் செய்து விட்டார்கள்
பணமான பின் பட்டம் வாங்க விடுகிறார்கள்
நான் காகிதமாக இருந்த பொழுது
பந்தாக்கி சுழற்றினார்கள்
பணமான பின் பந்தாக சுழல்கிறார்கள் என்னை பெற
உன் திறமை அறியாதவர்கள் உன்னை தூற்றுவார்கள்
உன் திறமை அறிந்தபின் போற்றுவார்கள்
இதுதான் உலகம்!