நான் வரலாமா
என்னவளே!
என்னூள் இருப்பவளே!!
உன் கூந்தலில் நீ சூடிய மல்லிகை பூக்கள் சரமாய் நான் வரவா....
அதை நீ முன்னால் எடுத்துப் போட உன் இதய துடிப்பை கொஞ்சம் ஒட்டு கேட்கலாமா.....உன் நெஞ்சோடே நான் ஒட்டிக் கிடக்கலாமா.......
கண்ணொளியே!
நான் காணும் ஒளியே!!
உன் வட்டமான முகம்
கொஞ்சம் வாட்டமாக இருக்கிதே
நான் வண்ணப் பொட்டாய்
வரலாமா....அங்கேயே எனக்கோரு
குடிசை கட்டலாமா....
முக்கனியே!
முத்துச்சரமே! ரதமே!!
உன் காதணி அசைவில் என்
பேரண்டத்தில் ஒரு
பிரளயம் நடக்குதே...அதற்கு பதில்
நானே உன் காதணியாக வரலாமா...அப்போழுதாவது உன் கண்ணத்தில் கால் கிரவுண்டு இடத்தையாவது நான் முத்தமிடும்
வாய்ப்பு கிடைக்காதோ என்று தான்.....
நிலவழகே!
நீல வானழகே!!
உன் மார் மறைக்கும்
மேலாடையாக நான் வரலாமா...உனக்கு சம்மதம் தெரிவிக்க வெட்கமாக இருந்தால்
நீ கண் அசைத்தாலே அதுவே
போதுமான பதில் தான் எனக்கு.....
உன் கரம் சேர்ந்த வளையலாக
நான் வரலாமா....உன் கைவிரல்களின் வலைவு நெளிவுகளை தெரிந்துகொள்ள.....
மஞ்சல் முக ராணியே!
என் உயிர் உறிஞ்சும் தேனியே!!
உன் பிஞ்சு விரல் பாதங்கள்
நோகாமல் இருக்க காலணியாக நான் வரலாமா....நான் ஒன்றும் அவ்வளவு மென்மையாவன் அல்ல
உன் பாதங்களை விட...காலணி வலி கொடுக்குதே என கழற்றிவிடாதே இது அடியனின் வேண்டுகோள்....
அந்தி சாயும் நேரத்திலோ
அதிகாலை அரை தூக்கத்திலோ....உன் மடியில் சாய்ந்தே கிடக்க
நான் வரலாமா.............