---- ABSTARCTION OF IT ----
ஐTயில் வேலை தான்
அDமை வேலை தான்
சுண்டுபவர்கள் சுண்டி நிமிர முதல்
சொன்னதை செய்யும் ஊழியராய்(கூலியாராய்)
அந்நிய நாட்டான் அள்ளிக் கொடுக்க
கிள்ளித்தரும் நோட்டுக்காய் பல இரவு விழித்திருந்து
பசித்திருந்து தனிதிருக்கவும் கற்றதென்னவோ இங்கு தான்
கம்ப்யூட்டர் முன்னே சமதியாகி போகும்
மனித வர்க்கம் நம்முள் பல காணலாம் இங்கே
போலியாக சிரிக்க கற்றுக்கொண்டதும்
புறம் பேச பார்பதோடு நின்றுவிடாது
பேசுவோர்க்கு கம்பனி குடுக்கவும் கற்றது இங்கு தான்
Stress என்ற வார்த்தை நாளொரு மணி துளியும்
வாய் புரண்டு ஓடிதிரியும்
Dress Code மாறும்
FOOD CLAIM எனும் பேரில் கதையின் சாராம்சம் என்னவோ பீட்ஸா வும் பர்கரும்
உண்டு CAUGHT POTATO ஆனது தான்
BOOTSTARP இலிருந்து BOOTS வாங்கும் வரை
சமையல் குறிப்பிலிருந்து Sample coding வரை விளக்கம் தர
GOOGLE இடம் அடமானம் வைத்தோம் மூளையை
ஆறாம் வகுப்பில் விஞ்ஞானத்தின் விந்தை
பதினோராம் வகுப்பில் அறிவியலின் விந்தை
விளக்க கட்டுரை வரைகையில் வியந்தது உண்மை தான் எனினும்
இப்போது பயந்து பின் வாங்கிகுறோம் என்பது வாஸ்தவமே
இயந்திரம் அற்ற வாழ்க்கை
சுதந்திரம் என்ற CONCEPT ஐ BIGGBOSS வீடு பொய்யாக்கினாலும்
அப்படி ஒரு உலகத்தில் அரையாண்டு வாழ வேண்டும்
வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ வேண்டும்
ஓவியவாய் இல்லாவிடினும் யாருக்கும் பாவியாய் இல்லாமல்...
உண்மையில் இதுவும் ஒரு BERMUDA TRIANGLE தான்
குதிதவர்கள் சகித்துக்கொண்டு மீளமுடியாதவர்கள் தான் சதவீததில் அதிகம்
என் கருத்து கணிப்பின் படி
புள்ளிவிபரவியலின் HYPOTHESIS ம் இதைதான் சொல்லும் எனும் நம்பிக்கையில்