காவேரி அரசியல்
காவேரி அரசியல்
காவேரி நதியே
நீ
எங்கள் தாகம் தணிக்க
வர மறுக்கிறாய்
நீ
எங்கள் பயிர் செழிக்க
வர மறுக்கிறாய்
ஆனால் தமிழக
அரசியல்வாதிகளின்
மேடைகளில் மட்டும்
எப்படி
தவறாமல் குதிக்கிறாய்
அதுவும் அவர்களைப்போலவே
எங்களை
எளிதில் ஏமாற்றி விட்டு
கானல் நீராய் பறக்கிறாய்
சூரியன்வேதா