என்னால்

என்னால் !
வெற்றி மேல் வெற்றி
வந்த பொழுது !
என்னால் என்னால்
என்றெண்ணி
இந் நாள் வரைக்கும்
இருந்து விட்டேன்
உன்னால் உன்னால்
என்று சொல்லி
என்னை வழி மொழிந்தவர்கள்
வெற்றிகள் நழுவும்
பொழுது !
என் பின்னால் !
இவனால் இவனால்
என்கிறார்கள்