ஆஷிபா

சகோதரர்களே...
சிறுமி ஆஷிபா பேசுகிறேன்
மதத்தோடு 'நீ'ங்கள் இணைந்திருப்பது தவறல்ல
இடையினில் 'னி'யையும்
இணைத்துக் கொள்ளவே
வேண்டுகிறேன்
ம(னி)தம் நிலைத்திருந்தால்
இன்று நான்... சிரித்துக்கொண்டிருந்திருப்பேன்
மதவெறி புகுந்ததுனாலேயே
சிதைக்கப்பட்டிருக்கிறேன்
உணர்ந்து செயல்படுங்கள்