பெண்மையும் பகுத்தறிவும்

பெண்கள் பட்டிக்காட்டில் இருந்தாலும்
பாமரர் குலத்தில் பிறந்தாலும்
பல கலைகள் கற்று பட்டம் வாங்கினாலும்
அறிவை வளர்க்கும் ஆசானாகினாலும்
ஆண்டாண்டு காலம் சிறப்பாய் ஆட்சி செய்தாலும்
இல்லத்தரசியாய் இனிமையான வாழ்வை நடத்தினாலும்
ஈடில்லா எழுச்சி நாயகியானாலும்
உலகம் சுற்றும் ஆற்றல் கொண்டாலும்
ஊரையே வெல்லும் வல்லமை பெற்றாலும்
எட்டாக் கனியாய் கோபுரத்தில் வசித்தாலும்
ஏழைகளின் குடிசையில் வாழ்ந்தாலும்
ஐயம் கொள்ளாத போராளியாக இருந்தாலும்
அன்றிலிருந்து இன்றுவரை பெண்களைக் காணும் -
சில கண்களின் வேற்றுமை மாறவில்லையே!
போர்க்கொடியே ஏந்தி சென்றாலும் - ஒரு நிமிடம்
'பெண் தானே' என்ற ஏளனப்பார்வை மாறவில்லையே?
உடல் பலம் கொண்டு வெல்ல நினைக்கும்
பல ஆடவர்களும் அறியவில்லை
அது நிலையில்லாதது என்று
உடல் வலிமை விட மனவலிமை தான் உறுதியானது என்று
அந்த மனவலிமை பெண்களுக்கு தான் அதிகம் என்று
இதை உணர்ந்தவர்களால் பெண்களைக் காயப்படுத்த இயலாது
கண்ணீர் கொள்ளச் செய்ய இயலாது