கல்வி இன்று
அகத்தே புதைந்திருக்கும் மெய்ப்பொருளைப் புறத்தே பிரகாசிக்க வைப்பதே கல்வி
சிறப்பாய்த் தான் இருந்தது சிந்திக்கும் வரையில்
சிதையத் தொடங்கியது கல்விச்சாலை சிறைச்சாலையானபின்
புரிதலும் தெளிதலும் மழுங்கின மனப்பாட யுக்தி முளைத்தபின்
கல்வியின் உயிர் நீக்கப்பட்டது மதிப்பெண் சேர்க்கையால்
தாய்மொழிவழிக் கல்வியை நாடு கடத்தியே விட்டோம்
இன்றைய கல்வி பொருள் தேடி ஓடிட வழித்தடமானது
பெருஞ்செல்வம் தேடும் கூட்டத்திற்கு வணிக மையமானது
விலைக்கு விற்கப்படுவதும் விலைக்கு வாங்கப்படுவதுமான அவலம்
சமூகத்தில் வாழும் மனிதனை உருவாக்காது
சமூகத்தில் வாழக்கூடாத மிருகங்களை உருவாக்குகிறதே !
பாலியல் சமத்துவம் ஏட்டளவிலே நின்று போகிறதே
ரத்த வெள்ளமும் அமிலத் தழும்புகளும்தான் இன்றைய கல்வி போதிக்கும் பாடங்களோ !
ராணுவ வீரர் வீர மரணமும் நாட்டைச் சிதைக்கும் தீய சக்திகளின் பன்முகங்களும்
மறைக்கப்படுவதும் மறக்கப்படுவதும் தான் இன்றைய நிலையோ !
உடல்துளைக்கும் குண்டுகளும் இடிமுழங்கும் பீரங்கிகளும்தான் வளர்ச்சியோ!
மனஉறுதியும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் அற்ற கல்வி கற்று என்ன பயன் ?
மர்மம் நிறைந்த மருத்துவ மாணவர் மரணம் , மருத்துவம் பயில தற்(கொலை )
முளைவிடும் சிங்கராச் சிட்டுகளை மூன்றிலே சிறையில் முடக்குகிறோம்
அலட்சியத் தீயினிலே தப்பிக்கும் வழிக்கூடத்தெரியாது கருகிய குழந்தைகளும்
தற்காப்புத்திறனறியாது அரசியல் தீக்கும் காட்டுத்தீக்கும் கொடிய மனித மிருகங்களிடமும் அடிபணிவதுதான் இன்றைய மாணவர் வாழ்க்கையோ !
மாணவர் வாழ்க்கையிலான மாற்றம் இந்தியாவின்
வருங்காலத்தூண்களைச் சிறப்பாக்கும்