மனதில் சில மண்சிற்பங்கள்
கரைந்துவிடும்
என அறிந்தே
வடித்து வைக்கிறேன்
மணற்ச்சிற்பங்களை
என் மனக்கரையில்...
விதவிதமாய் எத்தனை?
ஒன்று கைகள் தூக்கி
நட்பு பாராட்டியது..
ஒன்று மெல்லிய
நிலவொளியாய் அழகாய்
காதல் பேசியது..
ஒன்று நெருப்பில்லாமலே
சுவாசிக்க விடாமல்
மீண்டும் மீண்டும்
இதயத்தை சுட்டது...
ஒன்று நீயாயென
கேட்டு
மனதில் பாளாறென்று
அறைந்தது...
ஒன்றை மட்டும்
வரையறுக்க முடியவில்லை
அரூபமாய் பல்
இளித்துகொண்டு
பரிகாசம் செய்தது
நானே கரைத்துவிட்டேன்
கைகளால் ஏன்?
எதுவும் பிடிக்காமல்
எழுந்து நடந்தேன்
திரும்பி பார்க்கையில்
அகோரப்பசியில் அனைத்தையும்
தின்றுகொண்டிருந்தது
வாழ்க்கை பேரலை...
எனை நோக்கி
கண் சிமிட்டியது
அடுத்தது நீயென...