அவன் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தான்

ஆலய வாசலின் அன்றாடப் பிச்சைக்காரனே
உனக்கு இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்து என்றான் அவன் !
உன்னைப் போலில்லை ஒவ்வொரு நாளும் புத்தாண்டு கொண்டாடுகிறேன்
ஒவ்வொரு நாளும் ஒரு வேளைச் சோறு கிடைத்தால் நல்லாண்டு
இல்லை என்றால் BAD ஆண்டு !
காசை விட்டெறிந்து விட்டுச் செல்லும் கருணை உள்ளமே
பர்சில் பதுக்கி வைத்திருக்கும் கரன்சியை உருவிப் போடு
சித்திரை உனக்கும் இனிக்கும் எனக்கும் என்றான்
நிக்கல் நாயகன் நக்கலாக !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-18, 9:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே