மறக்க முடியுமா

வாழையின் பசுமை
உன் அன்பு
ஏழைக்கு உதவும்
நல் கருணை
பேடைச்சிறகுகள்
உன் அரவணைப்பு
காலத்தால் சிதையாத
உன் பாசம்
இத்தனை சிறந்த
பன்புள்ள உன்னை
பேழையில் பார்த்தப்போது
பதறியது எங்கள் உள்ளம்...

இமைகளே
கண்ணை குத்தினால்
பார்வை என்னவாகும்
இறைவனே
சாபம் கொடுத்தால்
பக்தி என்னவாகும்
நீயே எங்களை
பிரிந்துப்போனால்
எங்கள் வாழ்க்கை என்னவாகும்...

பூமி
இரண்டாக பிளந்தாலும்
வான்மழை
தீச்சொட்டாய் விழுந்தாலும்
குடிநீர்
அமிலமாய் ஆனாலும்
சுவாசக்காற்று
விஷமாய் போனாலும்
எங்களுக்கென்ன கவலை
நீ எங்கள் அருகில் இருந்தால்...

இவ்வளவு சீக்கிரம்
விட்டு பிரிவாய் என நினைக்கவில்லை
தொட்டு தூக்கிய
உன் கரங்களை மறக்கவில்லை
உன் விரல் பிடித்து
நடந்த நாட்கள் இன்னும்
எங்கள் நெஞ்சிலே வாழும்போது
நீ பிரிந்ததை நம்பமுடியவில்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (16-Apr-18, 9:55 am)
Tanglish : appa nee engae
பார்வை : 2382

மேலே