அழிவின் உச்சம்
குழந்தையும் தெய்வமும்
ஒன்று.
அந்த தெய்வத்தை
கோயிலிலே கொன்றனறே
இன்று
வழிபாட்டு இடமெல்லாம்
வன்புணர்வு இடமென்றால்
அது
அழிவின் உச்சியை
நாம்
அடைந்ததன் அடையாளம்
எம்மதமும்
சொல்வதில்லை
வன்முறையை வழியாக
உன் மதம் காக்க
வன்முறை தான்
வழியென்று
நீ நினைத்தால்
நீ
கட்டிக் காப்பது
மதம் அல்ல
மலம்...!
- பா. மாறன்