எப்போது இணைவது நாம்....!
குளத்தில் வீசி எறிந்த கல்லாய் கண் இரண்டும் கண்ணீர் குளத்தில் விழுந்து பாசி படிந்து போனது இதயமும் கனங்கனத்து கிழிந்து போனது உடலோ உன் அணைப்புக்காக காத்திருக்கலானது
உயிர் கூட உன் கூடே இருக்க அடம்பிடிக்குது
என் அவஸ்தைகள் தெரிந்தும்
நீ இன்னும் என்னை வந்து சேரவில்லை, நீ என்னை வந்து சேரும் வரை நானும் உன்னை விடுவதாய் இல்லை,
வேதனையூட்டும் என் காதலே!
இப்போது தனிமையில் நான்
எப்போது இணைவது நாம்....!

