பெண்களின் நட்பு

பெண்களின் நட்பு என்றுமே அழகு....

நட்பின் ஆழத்தில்; ஆண் பெண் ஏதடி?
பாலினம் கண்டு தான் பழகிட கூடுமோ?
காதலும் காமமும் காணாத உறவெது?
தோழியே உன்னிடம் நான் கொண்ட நட்பது!

தங்கையைப் போலவே சண்டைகள் போடுவாய்;
காதலி போலவே பாசமும் காட்டுவாய்!

தோழனின் நட்பிலே தைரியம் வந்தது;
தோழியே உன்னிடம் தாய்மையும் சேர்ந்தது!!

எதிர்பார்ப்பு ஏதுமில்லா பழகிடும் ஓர் உயிரது ,
எங்கிருந்தோ என்வாழ்வில் வரமாக வந்தது!

அவள்..
பாரம் தாங்கும் தோள்கள் தந்தவள்,
என் கண்ணீர் துடைக்கும் கைக்குட்டை ஆனவள்!!

நாளை ஒருவர்க்கு....
மகளாக , மருமகளாக...
துணையாக , தாயக நீ மாறிடலாம்!
ஆனால்,
உன் உறவுகள் மாற்றம் கண்டாலும்
நம் நட்பினில் மாறுதல் கிடையாது!

ஆண் பெண் நட்பினை ஏளனம் பேசுவர்!
இங்கே யார் அறிவார் நாம் கொண்ட பந்தம்?
தோழியே..
என்றுமே நீ என் இரத்தத்தில் சேராத சொந்தம்!!

எழுதியவர் : பா.பிரசாத் குமார் (22-Apr-18, 9:05 pm)
சேர்த்தது : prasath kumar
Tanglish : pengalin natpu
பார்வை : 289

மேலே