நன்றி எழுத்து தளம்எங்கே போனார்கள் என் எழுத்து தள நண்பர்கள்

திரு.அகன்( புதுவை):
தளத்தில் என்னை ஊக்குவித்த
முதல் ஆசான்.
கவிச்சக்கரவர்த்தி.....

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா(நாகர்கோவில்):
இலக்கியத்தையும் புதுக்கவிதையையும் இணைத்து
யாவருக்கும் புரியும் படி
எழுதும் தளத்தின் என் முதல்
நண்பன்.....
கருத்து வேறுபாடு வந்தது..
காணவில்லை


கே.எஸ்.கலை(இலங்கை):
மிகச்சிறந்த கவிஞர்
இலங்கையிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு
என்னுடன் பேசிய சிறந்த
நண்பர்....தளத்தில்
ஏதோ சண்டை போட்டோம்.....
எதற்காக சண்டை போட்டோம்
என்று மறந்தே போனது...நட்பு வட்டத்தில் இருந்து எனை நீக்கியும் விட்டார்......

புலமி அம்பிகா:
தமிழ் எழுத்துக்களை தட்டியெழுப்பி
விளையாடும் எழுத்தாளுமை
மிக்க முதல் பெண்
நண்பர்........சில சூழ்நிலைகள்...
காணவில்லை.....

அகத்தியா (புதுச்சேரி):
அன்றிலிருந்து இன்றுவரை
தொடர்பில்
அண்ணன் போல் காட்சியளிக்கும்
அன்புத்தம்பி.......

பாரதி நீரு(புதுச்சேரி):
6.3 அடி உள்ள உயரமான
கவிஞர்..
என் கவிதைகளை
ரசித்து ஒரு கவிதையின்
தலைப்பை(வள்ளுவர் வீடு பூட்டியிருக்கிறது) இன்றும் சொல்லும்
ரசிகன்.....
தளத்தில் பேசியதில்லை
முகநூலில் பழக்கமான நண்பர்....


தளத்தில் இருக்கும்போது பேசவில்லை....


வினோத்கண்ணன்:
சட்டென கவி எழுதி
முடிக்கும் அறிவியல் கவிஞர்..
என்னை நேரில் பார்த்துவிட்டு
"தம்பி ருத்ரா வை கூட்டிட்டு
வாப்பா "என்று கலாய்த்து பழகி
ஒருநாள்
அவர் என்னை தொலைபேசியில்
அழைக்கும் போது எடுக்கவில்லை...
அதோடு முடிந்தது தொடர்பு....
காணவில்லை.....

வெள்ளூர் ராசா:
எழுத்துக்களை வித்தியாசமாய்
கொடுக்கும் எதார்த்த கவிஞர்....
சிறந்த படைப்பாளி....
நீண்ட வருசத்துக்கு பின்
தொடர்பில் இருக்கும் நண்பர்....
தளத்தில் இப்போது அடிச்சுக்கவும் ஆள் இல்லை
அணைச்சுக்கவும் ஆள் இல்லை
என்று கலாய்க்கும் நண்பர்...

நிலா சூரியன்:
இரு வரி எழுதினாலும்
இருநூறு வருடங்கள் ஞாபகமிருக்கும் கவிதைகளுக்கு
சொந்தக்காரர்.....
வரிகளில் புரட்சி செய்பவர்.....
பேசியதில்லை.....ஆனால்
இவர் கவிகளின் ரசிகன் நான்....
காணவில்லை...

அகமது அலி:
ஒரு ஏழை பெண்ணின் வலிகளை
தன் கவிகளில் காட்சியாய்
காட்டும் ஆத்மார்த்த கவிஞர்.....
என் அத்துணை கவிகளுக்கும்
தவறாது கருத்துரைப்பவரும் கூட....காணவில்லை...

ரமேஷலாம்:
இரத்தத்தை மென்மையாய்
எழுதுவது எப்படியென்று
தோழரிடம் தான் கற்றுக்கொள்ள
வேண்டும்......
அவ்வளவு மென்மையான
கவிஞர்....

கவித்தாசபாபதி:
இவரின் கவிதைகளை பாராட்டுவதற்கு கூட
ஒரு தகுதி வேண்டும்.....
வார்த்தை அடுக்குகள்
அவ்வளவு அழகாய் இருக்கும்...
ஒரே நாள் பேசிட
தொலைபேசியில் தொடர்புகோண்டேன்......பேசினோம்
இன்று எங்கோ....?

திரு.பொள்ளாச்சி அபி
"அப்படித்தான் துப்புவேன்",
என்ற கவிதை மூலம் எனை
ஆட்கொண்டார்.....
பல கவிதை கட்டுரை நூல்களுக்கு சொந்தக்காரர்.....
ஒரு முறையாவது பேசிட லாம்
என்று நினைத்து இன்று வரை பேசாமல்
தவற விட்ட தோழர்......

ஹூஜா(hujja)
தளத்தில் என் கவிதையை எங்கு பார்த்தாலும் சட்டென இது
ருத்ரா வின் கவிதை யென்று
பெயரை பார்க்காமலே கண்டுபிடித்து விடும்
அன்புச் சகோதரி..........ஒரே ஒருநாள்
தொலைபேசியில் பேசினார்...

(இன்னும் நிறைய நண்பர்கள் விட்டுப் போனார்கள்)

முன்பு போல் நிறைய
சிறந்த கவிதைகள் படைக்கும்
நண்பர்கள் இல்லாமல்
தளத்தில் அர்த்தமுள்ள
கவிதைகளை பார்க்க முடியவில்லை........நன்றி
எழுத்து தளம்....

எழுதியவர் : ருத்ரா (23-Apr-18, 2:50 pm)
பார்வை : 173

மேலே