சமூகக் குற்றம்

சமூகக் குற்றம் !
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்
உலகில்
சட்டங்கள் இயற்றுவதும்
பட்டங்கள் வாங்கி
நீதிக்காக வாதிடுவதும்
சமூகக் குற்றம் குறைவதற்கே !

உலகில்
நீதி நிதியிடம்
தஞ்சம் அடைவதும்
பதவி மிரட்டலுக்கு
பயந்து திசை மாறுவதும்
சமூகக் குற்றங்கள்
விசக்கிருமியாக பரவுமே !

உலகில்
அன்பு என்னும் விதை விதைத்து
பண்பு என்னும் நீர் பாய்ச்சி
மனிதநேய உரமிட்டு
குற்றம் என்னும் களை நீக்கி
சமூக நலப் பயிரை வளர்ப்போமாக !


பூ. சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (23-Apr-18, 10:59 pm)
பார்வை : 137

மேலே