வேடிக்கையாய் அது வாடிக்கையாய்
தொடர்ந்து
பூத்தது
எதிர் வீட்டு
செம்பருத்தி
வண்டுகள்
வருவதும்
நுகர்வதும்
நகர்வதும்
தொடரும்
வாடிக்கையாய்
சீர்செனத்தி
இன்றி
எனக்கது
வேடிக்கையாய்
ஆதங்கத்தோடு
நான் பார்க்க
பூத்தபலனை
அநுபவித்து
வந்தவேலை
முடித்து
காணாது
போனது
நானும் பூத்து
காத்திருக்க
சமீபத்தில்
திறந்த
பொருட்காட்சியாய்
பார்வையாளர்கள்
வந்தார்கள்
பார்த்தார்கள்
போனார்கள்
அவர்களுக்கு
வேடிக்கையாய்
எனக்கது
வாடிக்கையாய்
எதற்கு வந்தேன்
தெரியவில்லை
என்ன
செய்வதென்று
புரியவில்லை
முடிந்துப்போன
பொருட்காட்சியாய்
முடிக்கமுடியா
இக் கவிதையாய்
வெறிசோடியதே
என் மனமும்..,
நா.சே..,