நினைவுகள்

உன் கைகளை கோர்த்து
நடக்க ஆசை பட்டேன்
நீயோ என் கைகளை உதறிவிட்டு
சென்று விட்டாய்

உன் அருகே இருக்க
ஆசை பட்டேன்
நீயோ என்னை விட்டு வெகு தொலைவில் சென்று விட்டாய்

உன் காதலோடு வாழ
ஆசை பட்டேன்
நீயோ என்னையே விட்டு
சென்று விட்டாய்

நீ எங்கே இருந்தாலும்
என் நினைவுகள்
என் காதல்
உன்னை விட்டு செல்லாது...
என்றென்றும் உன்னுடன் நான்...

எழுதியவர் : உமா மணி படைப்பு (23-Apr-18, 11:13 am)
Tanglish : ninaivukal
பார்வை : 335

மேலே