காவிரிக்காய்ப் புலம்பிடுவேன்
’மேய்ப்பானும் வந்து வெறியும் அடங்கினால்’
தாய்ப்பாலாய்க் காவிரியும் தானாக வந்திடுமே!
காய்ப்பானின் நெஞ்சிலே கருணைமுகில் தோன்றுமேல்
காய்ந்தநிலம் மாறிவிடக் களிநெஞ்சில் கூடுமே!
தேவர்க்குக் கோயிலும் தேவையோ இல்லையோ
யாவர்க்கும் நீர்தர யாருமே இல்லையே!
பாவர்க்குக் கூட மன்னிப்பு கிட்டுமே
தேவைக்கு நீர்தரத் தேடிக்கொண் டாடுமே!
விண்மதி மீண்டும் விரும்பவே தோன்றலாம்;
கண்புரை நீக்கியே காணலாம்தான் – மண்ணணைக்கும்
சோமனாய் வந்திருந்த சொக்கனே காவிரிக்[கு]
ஏமனாய் நிற்பார் எரி!