தரிசனம்
தரிசனம் காண சென்றபோது
பந்தம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்ற அவளை பற்றி
எட்டாத தூரத்தில் அவள் இருந்தாலும் அவளை
எட்டி எட்டி பார்க்க என் மனம் தயங்கவில்லை
கூட்டம் அதிகமாக இருந்ததால் அவள் கிட்டே சென்று என்னால் பார்க்க முடியவில்லை
கிட்டே செல்ல முடியாவிட்டாலும் என் கண்கள் அவளை வட்டமடிப்பதை நிறுத்தவில்லை
இரவில் கரு வானத்தில் புறாக்களை போன்று விண்மீன்கள் பல, நிலவை சுற்றி இருப்பது போல
நிலவாக காட்சி தந்த மீனாக்ஷி அம்மனை சுற்றி பல வண்புறாக்கள் சூழ்ந்து இருந்தன
அந்த வன்புறாகளில்
நான் பார்த்த அப்புறா ஒரு பெண்புறா
அதுவும் அழகிய வெண்புறா
கூட்டத்தில் ஒருத்தனாக தரிசனம் காண வந்த எனக்கு
அவளின் அழகின் தரிசனத்தை தந்த அவள் என்றும் "தனி ஒருத்தியே"..