கைபேசியில் கைதான உலகம்

என் பிறந்தநாள் அன்று..,
அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தந்து
அண்ணனும், அக்காவும்
அன்பை கலந்து..,
என்னுறக்கம் களைத்தனர்...!

அன்னையும், தந்தையும்
என் சிந்தை மயங்க
சிறப்பாய் வாழ்த்துரைத்தனர்...,

தாத்தா, பாட்டியின்
பாதம் தொட்டிருந்தேன்...
அவர்கள் ஆசியும் பெற்றிருந்தேன்...!

ஊராரும், உறவாரும்
நேரம் பார்த்து வந்தனர்...,
நெஞ்சத்தில் நெகிழ்வள்ளி தந்தனர்...!

எல்லாம் கனவுகளின் பிம்பம்....!!!

முதல் வாழ்த்து.,
அண்ணன் ட்விட்டரில்..
அக்கா ஹைக்-கில்..

முகம் பார்த்து
சொல்ல வேண்டிய வாழ்த்துக்கள்...
முகப்புத்தகத்தில்
போஸ்ட்டாய் வெளியானது..!!!
முகமறியா தோழமைகளிடமிருந்து கூட குவிந்தன வாழ்த்துக்கள்...!!

தாத்தா, பாட்டி
ஸ்கைப்பில் சிரித்தனர்...!!
சிலர் ஐஎம்ஓ வில் அனைத்தனர்..!!

சிலாகிக்கவா...?! சிந்திக்கவா...?!
உலக முன்னேற்றத்தின்
உத்தம உயிர்போக்கி...
உறவுகளின் ஒற்றுமைக்கு
முற்றுப்புள்ளி வைக்கும்
மையில்லா கோல்...!!!

நன்மையும், தீமையும்
நலமுடன் கலந்த
நாகரீக ஆயுதம்...
நன்மையை விட
அதிகம் பயன்படுத்துவது,..
நலம்கெடவே...!

கண்ணிரண்டிற்க்கு
போடவேண்டிய கடிவாளம்..
கைகளில் போடப்பட்டுள்ளது...!!!

கையளவு கைபேசியில்
கைதாகிபோன உலகம்.,
வெளிச்சத்தின் தேடல் வலையை
இருளில் வீசுகிறதோ..?!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (6-May-18, 9:46 pm)
பார்வை : 184

மேலே