உளமாற நேசிக்கின்றேனடி

இந்த பூமியை அல்ல
அந்த வானத்தை அல்ல
பூக்கும் பூக்களை அல்ல
உதிரும் இலையை அல்ல
காலை உதிக்கும் கதிரவனை அல்ல மாலை ஜொலிக்கும் சந்திரனை அல்ல
என் உடலை அல்ல
உயிரையும் அல்ல
ஆனால் உன்னை மட்டும் உளமாற நேசிக்கின்றேனடி..........!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Apr-18, 9:27 pm)
பார்வை : 66

மேலே