எதிர்காலம்

முகச்சாயம் பூசியோர்கள்
ஏழையெளியோரை எளிதில்
காசாயம் வைத்து குடித்திட
விவசாயிகள் கிடைத்தனர்
விதைகள் முளைக்கும்
அரவம் தெரியாமலே அது
மரமாகி விழுந்திடும் போது
பூமியே அதிர்ந்து போகிறது
மனம் உறைந்திடும் போலே
இதுதான் நடக்கிறது இன்று
விவசாயிகள் சமுகத்திலே
என்னாகும் எதிர்காலம்••?
விளைப்பயிரைப் பயிராய்
எண்ணாது விவசாயி தன் உயிருக்கு மேலாக உயிராக எண்ணுவதால் இன்றோ
அந்தப் பயிர் நீரற்று வாடும் வதை தாங்க முடியாது தன் உயிரையே தியாகம் செய்கிறான் விவசாயி
என்னாகும் எதிர்காலம்••?
கையை விரித்திட்டது பருவமழை அரசாங்கம்
கண்ணிருந்தும் குருடாகி
வழி அறியாது அலைகிறது
நினைக்க வேண்டியவர்
நினைத்திருந்தால் மழை
கிணறு நதி நீர் கிடையாத
பட்சம் டேங்கர் நீரையேனும்
ஊற்ற வழிவகுத்திருக்க
பயிர்களை காத்திருக்கலாம்
உயிர் சேதம் நின்றிருக்கும்
எவன் வாழ்ந்தென்ன
எவன் செத்தால் நமக் கென்ன
நதிநீர் பூபாலம்
அதை கேட்க காதில்லை
பதவிக்காய் எக்காளம்
என்னாகும் எதிர்காலம்••?
மாநிலமோ மத்தியமோ
அரசு நினைத்திருந்தால் இத்தனை இல்லங்களில் முகாரி இராகம் நுழைந்து
முக்கம் குலைந்திருக்காது
என்னாகும்" எதிர்காலம்••?"
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"எதிர்காலம்"
கவிதைமணியில்