எது மகிழ்ச்சி

பட்டாடை அணிந்த பிச்சைக்காரன்
இயற்கை ரசிக்கும் பணக்காரன்

நீர் கண்ட பாலைவனம்
குளிர் கண்ட கார்முகில்

இயற்கை சீற்றம் கண்ட எமதர்மன்
அழகை படைத்து மலைத்த பிரம்மன்

சம்பளம் சேதி கண்ட வேலைக்காரன்
சம்பளம் கரைக்க துடிக்கும் வேலைக்காரன்

அடிவான ஆதவன் கண்ட கொசுக்கள்
அதிகாலை ஆதவன் கண்ட சூரியகாந்தி

மங்கை இட்ட கோல காலை
கோலம் கண்ட ஆடவன் காலை

மடி வாசம் நுகரும் இளைஞன்
மடி பால் வாசம் நுகரும் இளங்கன்று !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சிங்கார (26-Apr-18, 11:15 pm)
Tanglish : ethu magizhchi
பார்வை : 523

மேலே