வாழ்க்கைப் பயணம்
எத்தனை சலனங்கள்
இந்த மனிதர்கள்
வாழ்க்கைப் பயணத்தில்
அத்தனையும் அவன்
உணர்வின் எழுச்சிகள்
கடல் அலைபோல்
ஓயாமல் வந்து
வந்து போவது
பிறப்பில் பெற்றோர் மகிழ்வு
வளர்ச்சியில் எழுச்சி
இளமையின் ஊஞ்சல் ஆட்டம்
கல்வியில் மேன்மை
வெற்றிப்பாதை தரும் ஆணவம்
வாழ்க்கையின் ஆரம்பம்
காதல் பயணம்
உலகையும் மறக்கும் உல்லாசம்
மணம் முடித்தல்
பிள்ளைகள் பெறுதல் -சம்சாரி
பொறுப்பின் சுமைகள்
சுமை தாங்கி
முதுமையின் துவக்கம்
துக்கத்தின் முதல் படி
நேற்றைய இளைஞன்
நிலைக்கு கண்ணாடி சொல்லி
சிரிக்கிறது இன்று நீ கிழவன் என்று
மூப்பின் கொக்கரிப்பு
உடல் குஹையில் வியாதிகள் நுழைவு
துன்பத்தில் அவதி -எத்தனைக் கோடி
பணமிருந்தும் யாக்கை நிலையாமை
நேற்று இருந்தவன் இன்று
இல்லை உடல் போனது
உயிர் எங்கே போனது
விஞானம் இன்றும் அறியவில்லை
இவை அத்தனையும் யோசிக்க வைப்பது
மனிதனுக்கு 'அவன்' அளித்த ஆறாம் அறிவு
த்யானத்தில் மனிதன் பெறலாம்
ஏழாம் அறிவு ............அந்த
படைத்தவனுடன் ஒன்று சேர
கடலோடு நதி சேர்வதொப்ப
விலங்கினங்களுக்கு இந்த சலனங்கள்
ஏதும் இல்லை, அவலங்களும் இல்லை
பிறக்கும் போது குழந்தை அழுதாலும்
பெற்றோரும் உற்றாரும் சிரிப்பார் மகிழ்ச்சியில்
இறக்கும்போது அழுகை
மீண்டும் பிறப்பு............தொடருது
வாழ்க்கைப் பயணம்