நடக்கட்டும் சர்வநாசம்

அன்று போய் இன்று வந்தது.
நாய்வாலான மனித சமுதாயம் மட்டும் மாறவே இல்லை.
தினமும் ஆடை அவிழ்ப்பதிலேயே கவனமாக உள்ளது ஊடகங்களும், உள்ள தாடகங்களும்.

அக்னி பற்றி எரியட்டும்.
காற்று விஷமாகட்டும்.
பூமி பிளவுற்று நெருப்பு வெளிப்படட்டும்.
நிலத்தைக் கடலே ஆதிக்கம் செய்யட்டும்.
விண்கற்களின் தாக்குதல் பூமியைக் குறிவைக்கட்டும்.

சாத்தான் பெயரில் வாழும் மனிதர்களின் நெஞ்சம் பிளக்கும்.
அங்கிருக்கும் சாத்தான் பிடிபடட்டும்.
படுக்கை அறைக்கும், மோசமான விஷத்திற்கும் விளம்பரம் கொடுக்கும் நடிகைகள், நடிகர்கள் அறுபடட்டும்.
மின்னல்கள் தாக்குதல் ஆரம்பிக்கட்டும்.
மேகங்கள் சூழ வந்து கண்களை மறைக்கட்டும்.

வேண்டாம், விஷமான மனித சாதி வேண்டாம்.
நான் அழிக்கப்பட அயோக்கிய மரபுகள் சிறிதும் இல்லாது நடக்கட்டும் சர்வ நாசம்.

அத்தனையும் கனப்பொழுதில் நடக்கட்டும்.
தொழிற்நுட்பத் தடங்களும் அழிக்கப்படட்டும்.
பொய்யுரைத்த நாக்கு நறுக்கப்படட்டும்.
புலன்களால் இழைக்கப்பட தவறுகளுக்கு புலன்களாலே பலன்கள் கிடைக்க,
எங்கும் எரியட்டும் கோர தீ பூமி தகிதகிக்க கடலே பொங்கி வந்து கழுவிப் போகட்டும் எரிந்து சாம்பலான மனித பூச்சிகளின் சாம்பலை.
நடக்கட்டும் சர்வ நாசம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Apr-18, 7:14 am)
பார்வை : 476

மேலே