மன்னன் ஓரி

#மன்னன் ஓரி

ஓரி என்ற ஒரு குறுநில மன்னன், கிட்டத்தட்ட 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு காடும், காடு சார்ந்த பகுதியையும் ஆட்சி செய்து வந்தான்...

நேர்மை தவறாத இவனது ஆட்சி,கடைமை தவறாது அற்பணிப்பு,என தனது வாழ்க்கை முழுவதையும் தன் மக்களுக்காகவே வாழ்ந்து வந்தான்..தன்
மக்களுக்கு ஒன்று என்றால் பொங்கி எழுவான்..பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் ஆடு,மாடு மேய்ப்பது மற்றும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையும் ஆகும்..

"ஓரி எப்படிபட்ட மன்னன், என்றால் தன் மக்களுக்காக தன் உயிரையும் பொருட்டாக மதிக்காதவன், எடுத்துகாட்டாக மக்கள் பலரின் ஆடு, மாடு
சிலரின் செல்வங்கள் நகை, பணம் போன்றவை ஒரு சீரிய இடைவெளியில் கொள்ளை அடிக்கபட்டு கொண்டு இருந்தது..இதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்று எண்ணி, காவலர்க ளுடன்,மன்னன் ஓரியும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டார்..அதில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்ச்சியில் வெற்றியும் பெற்றார்...ஆனால், அவர்களுடன் சண்டையிட்டதில் தன் இடது கால் குதிரையிலுருந்து விழுந்ததால் சுக்கு, நூறாக உடைந்து நொறுங்கியது இப்படி தான் உயிரையும் பொருட் படுத்தாமல் தன் மக்களின் நலனுக்காக வாழ்ந்த ஒரு மன்னன் ஓரி..

மன்னன் ஓரிக்கு,ஒரு மனைவி இரண்டு மகள்கள்..மனைவி மீயாழ்.மகள்கள் இருவரும் இரட்டையர் பெயர்கள் முறையே அருளாசினி மற்றும் குரளாசினி..இருவருக்கும் வயது 5 லிருந்து 6 குள்ளாக இருக்க வேண்டும்..
மனைவி மீயாழ்..ஒரு கோபக்காரி மிகவும் திமிர் பிடித்தவள்.. தான் நினைத்ததை எப்படியும் சாதித்து காட்ட கூடியவள்...மன்னன் ஓரி இதனையும் பொறுத்து கொண்டு ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தான்...

அப்போதுதான் வெள்ளையர்களின் வருகை நம் நாட்டிற்கு, வாணிபதிற்க்காக
வந்த நோக்கம் அல்லவா முதலில், இவர்கள் ஓரியின் குரு நிலத்தையும் விட்டு வைக்க வில்லை..அங்கேயும் சென்று வாணிபம் செய்தனர்..நாட்கள் செல்ல செல்ல மக்கள் அவர்களின் பழக்க வழக்கங்களையும்,அவர்களின் உடை கலாச்சாரத்தையும் பின் பற்ற தொடங்கினர்..அவர்களை போல் பாண்ட்,சர்ட் போன்றவைகளை அணிய ஆரம்பித்தனர்.மேலும், ஆங்கிலம் பேசுவது ஒரு பெருமையாக பார்க்கப்பட்டது..

இந்த மோகம் ஓரி யின் மனைவியையும் விட்டு வைக்கவில்லை..அவள், தம் மகள்கள் இருவரையும் நன்றாக ஆங்கிலம் பேசவைத்து இந்த சமூகத்தில் பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்று எண்ணி ஓரியிடம் முறையிட்டாள் மீயாழ்..

ஓரி நம் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறி, நம் மொழியை விட சிறந்த மொழி எது..?அது அப்படி இருக்க நமக்கு ஏன் வேற்று மொழி...என கூறினான் ஓரி..
ஆனால், அந்த திமிர் பிடித்த மீயாழ் ஓரி இடம் வாக்கு வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்றால்...

அதற்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் இனிமேல், இது பற்றி என்னிடம் எதுவும் கூறாதே என்று தீர்க்கமாக கூறினான் ஓரி..மீயாழ் அதற்காக ஒரு ஆங்கில பெண்மணி ஒருவரையும் நியமித்தால்..அப்பெண்மணி மீயாழ் உடன் ஒரு ஒப்பந்தத்தையும் போட்டு கொண்டாள்..அனைத்திற்கும் சரி சரி என்று தலையாட்டி கொண்டாள்..

ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் அப்பெண்மணி, அறுளாசினி மற்றும் குரளாசினி இருவருக்கும் போதித்தால் அவர்கள் இருவருக்கும் அதில் அவ்வளவாக உடன் பாடில்லை..தொடர்ந்து வகுப்பு நடந்து கொண்டு இருந்தது.. மீயா ழ் அவர்களின் பிள்ளையை நினைத்து பெருமை பட்டு கொண்டாள்...ஒரு வழியாக பாடங்கள் அனைத்தும் முடிந்தது..ஓரளவு அவர்கள் அனைத்து பொருட்களின் பெயரையும் ஆங்கிலத்தில் உரைத்தனர்..

சில நாட்கள் ஆனது, ஆங்கிலம் கற்பித்த அப்பெண்மணி ஒரு பெரும் திரளான கூட்டத்துடன் அரண்மனை நோக்கி வந்தாள்..அவள் மன்னன் ஓரி இடம் அவள் மீயாழ் இடம் போட்ட ஒப்பந்தத்தை காட்டினாள்..அதன் படி நீங்கள் அனைவரும் இந்த ராஜ்யத்தை விட்டு வெளியேறுங்கள் இது எங்களுக்கு சொந்தமான இடம் என்றாள்...மன்னன் ஓரி தன் மனைவி மீயாழை பார்த்து கடும் கோபத்துடன் முறைத்தான்.."அந்த ஒப்பந்தத்தின் படி ஆங்கில எழுத்துகள் ஒவ்வொன்றையும் சொல்லி கொடுக்க நாள் ஒன்றுக்கு ஒரு ஏக்கர் நிலம் சன்மானமாக பெற்று கொள்வேன்"என ஒப்பந்தம் போட்டு ,அதில் மீயாழும் அழகிய தமிழில் ஒப்புதல் போட்டு இருந்தாள்..அதன் படி 26 ஆங்கில எழுத்துக்கள் கற்பிக்க ஒரு நாள் வீதம் ஒரு ஏக்கர் நிலம் ,அவர்கள் ஆட்சி செய்யும் 26 ஏக்கர் நிலம் முழுவதும், ஒப்பந்தத்தின் படி ஆங்கிலேயர்களுக்கு அந்த நாடே தாரை வார்க்க படுகிறது..இன்னும் ஓரி, மீயாழின் மீது வைத்த கடும் கோபா பார்வையை இன்னும் எடுக்கவில்லை..
(கற்பனை கதை)
- முகம்மது முஃபாரிஸ். மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (27-Apr-18, 12:01 pm)
சேர்த்தது : Mohamed Mufariz
Tanglish : mannan ori
பார்வை : 685

மேலே