வாக்குறுதிகள்

சிலதினங்கள் தாமதம் ஆனாலும்
பருவங்கள் வருகை பொய்ப்பதில்லை
பருவங்கள் வந்தே தீரும்
சிலநிமிடங்களோ, சில மணியோ
தாமதம் ஆனாலும் ரயில் வண்டி
சேரும் இடம் வந்தே தீரும்

ஆயின், மனிதர்கள் 'வாக்குறுதி'
பலநேரம் வெறும் 'வாக்குறுதிக்கு'தான்
ஏன்,'வாக்குறுதிகள்' காற்றில்
ஏறுவது இப்போதெல்லாம் சகஜம்,.
இறைவனுக்கு மனிதன் தரும்
வாக்குறுதிகளும் உட்பட.
பருவமழை வருகையில் தாமதம்,
மழையை திட்டி தீர்க்கிறோம்
வாக்குறுதி தவறும் மனிதர்களை
மனிதன் விட்டுவிடுகிறானே !
வாக்குறுதிகள் காற்றோடு காற்றாய் போகின்றன.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Apr-18, 2:37 am)
Tanglish : vakkuruthikal
பார்வை : 74

மேலே