பாவம் காவேரி

நேற்றுவரை சிந்தனையிலும்
எண்ணிப் பார்க்கமுடியா
வடக்கு-தெற்கு கொரியா
இன்று இணைய விழைகின்றது
ஆனால் நம் நாட்டில்
இரு சகோதர மாநிலங்கள்
'காவேரி நதி' பிரச்னையை
சமூகமாய் தமக்குள்ளே
சமரச பேச்சுமூலம்
தீர்த்துக்கொள்ள முடியவில்லையே
பாவம் வதைபடுகிறாள்
'காவேரி' இங்கு இவர் இழுக்க.
அங்கு அவர் இழுக்க, இடையில்
நடுவர்களும் செய்வதறியாது
தலையைப் பிய்த்துக்கொள்ள,
காவேரியின் வலிகள்,
அவளை சுமக்கும்
அந்த பூமி அன்னைதான் அறிவாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (28-Apr-18, 4:31 am)
Tanglish : paavam kaveri
பார்வை : 63

மேலே