சப்தமில்லா சந்திப்பு

சப்தமில்ல சந்திப்பு !

என்னவளின் முகத்தை காண
எண்ணிலடங்கா கனவுகளுடன்
எண்ணிய படி நானூறு மைல் தூரம் பயணிக்க !

நிறுத்தம் ஒவ்வொன்றிலும்
நித்தம் நிந்தன் நினைவே !

திட்டமிட்ட நேரமும் வர
தெள்ளத் திகட்டிய மனதோடு நானும் நிற்க

எதிர்பாரா கணத்தில் என் மீதொரு கை படர

சீகிரம் வண்டிய எடு என்று அவள் கூற
சீரியவாறு நானும் செல்ல

தோளின் பிடியை அவள் பற்றி இறுக்க
பறந்தது பல்ஸர் ............

தொடங்கிய பயணம் முடிந்தது மூன்றே நொடியில் !

குருதி நிற உடையில் முதன்முதலில்
என்னவளை நான் காண

என் குருதி ஓட்டத்தின் வேகத்தை
என்னவென்று நானும் கூற !

அந்த பகல் பொழுதில் பளிங்கு முகத்தில்
உதிர்ந்த ஒரு வியர்வைச் சொட்டு

என்னவளின் நெற்றிச் சந்தனத்தைக் கரைக்க
சந்தன மரத்திலிருந்து சந்தனம்
வடிந்ததைக் கண்ட உவகை எனக்குள் !


முகம் பார்த்த முழு மகிழ்வுடன்
நானும் பேசத் துவக்க
முதல் வார்த்தைக்கு ஏங்கி
என் நா தழுதழுக்க

அப் பேரழகியின் காது மடல் ஓரத்தில்
மீண்டும் சங்கமித்தது
இருதளி வியர்வைச் சொட்டு !

அக் காது மடல் முடியினை இரு விரலால்
அவளும் இழுத்து விட
அதிலிரு முடி மட்டும் வர மறுத்து

அக் கவியின் கன்னத்தில் ஒட்டி நிற்க !
நான் பேச வந்த வார்த்தையும் முட்டி நிற்க !

என்னவளின் அழகை வர்ணிக்க
வார்த்தைஏதும் அற்றவனாய்

பரஸ்பரம் விழி பார்த்து
வழி திரும்பினோம் இருவரும் !

முடிவில்லா மலைப்பில் முதல் சந்திப்பு !


------------------------------------------இரா .சுதாகர்

எழுதியவர் : இரா.சுதாகர் (28-Apr-18, 8:15 pm)
சேர்த்தது : சுதாகர் இரா
பார்வை : 378

மேலே