நீ என் நிலவு

உன் முகத்தில் நிலவைக்கண்டேன்
அதன் ஒளியை, அழகை
என்னருகில் நீ இருக்கையில்
நிலவின் குளுமைக்கண்டேன்
நில்லாது ஓடுதோ நிலவு -என்றால்
இல்லை நாந்தான் அத்துடன் ஓடுகிறேன்
பெண்ணே நீ என்றும் எந்தன் நிலவே
உன்னை நான் தொடர்கின்றேன்
உன் மனதில் நிலைத்திடவே என் நிலவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Apr-18, 4:15 pm)
Tanglish : nee en nilavu
பார்வை : 296

மேலே