எஹெலப்பொல அதிகாரி

எஹெலப்பொல அதிகாரி

மனிதனுக்கு புத்தி கூர்மை இருந்தால் அது சில சமயம் நல்லதைச் செய்யவும், பேராசை நிமித்தம் கெட்டதை செய்யவும் தூண்டும். புத்தி கூர்மை மரபணுவோடு தொடர்புள்ளது . கண்டியில் இருந்து 20 மைல் வடக்கே A9 பெரும் பாதையில் உள்ள மாத்தளை நகரைச் சுற்றி உள்ள சில கிராமங்களில் “ரதல” என்ற உயர் சாதியைச் சேர்ந்த பிலிமத்தலாவ, ஹெப்பிடிப்போல , ரத்வத்த, எஹலப்பொல போன்ற கண்டி இராச்சியத்தின் அதிகார்கள் (Adigar) ஒரு காலத்தில் வாழ்ந்தனர் சிங்களத்தில் அதிகார் என்பது தமிழில் அதிகாரிகளைக் குறிக்கும்

அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் தவிர, மன்னரின் நீதிமன்றத்தின் மிக மூத்த உறுப்பினர்களாக அதிகார்கள் இருந்தனர். அவர்களின் செயல்பாடு ஒரு நவீன அமைச்சரவையைப் போலவே இருந்தது. கடமைகளை நிறைவேற்றுதல், அரசியலில் ஆலோசகர்களாக செயல்படுவது, ஜூனியர் அதிகாரிகள் நியமனம் செய்தல், இராணுவப் பிரச்சாரங்களில் நீதிபதிகளாகவும் தளபதிகளாகவும் செயல் படல், . அரசால் வழங்கப்பட்ட அனைத்து நில மானியங்களுக்கும் அதிகார்கள் கையெழுத்திடுவது வழமை . மஹா அதிகார் தற்கால பிரதம மந்திரி போன்றவர் அதிகார்களின் பதவிக் காலம் மன்னனின் விருப்பத்தைப் பொருத்தது. மன்னனுக்கு அதிகார் மேல விருப்பம் இல்லாவிட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப் படலாம் . பதவிகள் மரபுவழி வந்தவை அல்ல. ஒரே குடும்பத்தில் இருந்து அதிகார்கள் நியமிக்கப் படலாம். இவர்களில் பிலிமத்தலாவ மஹா அதிகாரியாக இருந்து. மன்னனாக வர சூழ்ச்சி செய்து .கடைசி கண்டி அரசனால் சிரச்சேதம் செய்யப் பட்டவர் .

மாத்தளை நகரத்திலிருந்து ஒன்பது மைல் தொலைவில் மாத்தளை மேற்கு பகுதியில் உடுகொட உதசியபத்து என்ற கிராமத்தில் எஹெபொல என்பவர் எஹெபொல ராஜ வம்சத்தில் 1773 இல் பிறந்து -மொரேசியஸ் தீவில் சில காலம் பிரிட்டிஷ் அரசால் நாடு கடத்தப் பட்டு புலம் பெயர்ந்து வாழ்ந்து 1829 இல் 56 வயதில் மறைந்தார்.

எஹெபொல குடும்பத்தின் தோற்றம், மாத்தளை வடக்கு உடுகொட-உதசியப் பத்தில் அமைந்துள்ளது. உண்மையில் எஹெபொல ஒரு கிராமம் மட்டுமல்ல, ஒரு ஆராச்சி அல்லது கிராமத் தலைவரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள வாசமா என்று அழைக்கப்படும் கிராமங்களின் கூட்டமாகும் . கினிகாமா, உருமல்லல்லா, கோஹோன, கோஹலோன்வெல, தாலுபோட்டா, வால்மோர்வவு, டெமேடா-ஓயா, ஹோமபொலா மற்றும் எஹெபொலாவ ஆகிய கிராமங்கள் இதில் அடங்கும். இந்த கிராமங்களில் நான்கு எஹெபொலா குடும்பத்தின் மூதாதையாருடன் இணைக்கப்பட்டுள்ளன . அக்குடும்பங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வழ்ந்தன .. நான்கு மூதாதையர் இல்லங்களில் உடுகொட-உதசிய பட்டுவாவில் "எஹெபொல வளவு" மற்றும் "மொனாரவில வளவு " ஆகியன உள்ளடங்கியிருந்தன எஹெபொலா ஒரு பிராமண பௌத்தர். ஆகவே அவரின் மூதாதையருக்கு தமிழ் நாட்டு பிராமண இனத்தோடு தொடர்பு இருந்திருக்கவேண்டும். தமிழ் நாட்டில் இருந்து வந்த நீல பெருமாள் என்ற பிராமணர் வழி வந்தவர்களே பண்டாரநாயக்கே. ரத்வத்தை வம்சம்.

****

கண்டி இராச்சியத்தின் மன்னனாக 1604 முதல் 1635 வரை செனரத் என்பவன் ஆண்டான் . அவனின் மறைவுக்குப் பின் பட்டத்து அரசியின் மகன் இராஜசிங்கே II ஆட்சி ஏறினான். 1635 ஆம் ஆண்டில் போர்துக்கேயர்களுக்கு எதிரான போர் நடந்தது. மூன்று தடவை போர்துக்கேயர் கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முயன்றும் தோழ்வியை சந்தித்தனர் எஹலப்போல மகா அதிகாரி , போர்த்துகேயர்களை வெளியேற்றுவதற்காக, ஒல்லாந்தருடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். செனரத்தினவின் மகன் கண்டி அரசன் இராஜசிங்கே II ஆட்சியில், .திருகோணமலையில் போர்த்துகீசிய கோட்டையின் தாக்குதலுக்கு எஹலபோலவின் பாட்டனார் போர்த்துகீசிய படையில் அதிகாரியாக இருந்தாலும் கண்டி செனரத் மன்னனுக்கு உதவி, போரில் வெற்றி பெறச் செய்தார் . அவர் போரில் வெற்றி பெற உதவியதால் மஹா .அதிகாரியாக நியமிக்கப் பட்டார்
, ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவற்றின் மொழி அறிவைக் கொண்ட ஒரு மிகவும் பல்மொழிகளை அறிந்தவர எஹெலபொல . அவர் பௌத்த பிரிவினாவில் கல்வி கற்றார், அவர் இளைஞனாக இருக்கும் போது கிராமத் தலைவரானார். மன்னரின் அரண்மனையில் அவர் போர்க்குணமுள்ளவராக கருதப் பட்டார் ..
சில பிரிட்டிஷ் வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி அழகிய இளவயதுள்ள எஹெலப்பொலவை , அரண்மனையின் அந்தப்புரத்தில் உள்ள பெண்கள் பெரிதும் விரும்பினார்கள். அவருக்கு அவர்களோடு இரகசிய உறவுகள் இருந்தது. ஒரு நாள் அவர் ராஜாவின் வைப்பாட்டிக்கு முத்தம் கொடுத்தபோது மன்னர் கண்டு அவருக்கு ஆறு சவுக்கடி கொடுக்கும் கட்டளை இட்டார் எஹெலப்பொலவுக்கு சவுக்கடி கொடுக்க இருந்தவரிடம் இருந்து சவுக்கை பறித்து, அவருக்கு சவுக்கடி கொடுத்தார்.
.
எஹெலப்பொலவுக்கு குமாரி-ஹாமி என்பவள் மச்சாள்முறை உறவினராவார், அழகியான அவளைச் சந்தித்தபோது அவள் மேல் எஹெலப்பொல காதல் கொண்டார. குமாரி-ஹாமியின் ஜோதிடத்தைப் பார்த்த ஜோதிடர்கள் அவளை திருமணம் செய்பவன் ராஜாவாவான் என்று சொன்னார்கள் . அவளுடைய மாமா சந்திரசேகர மூடியன் தனது அலுவலக வேலைகளுக்கு எஹெலப்பொலவை பயன்படுத்திக் கொண்டார்.

ஜோதிடர்களின் முன்கூட்டியே சொல்லியபடி , குமாரி-ஹாமியை மணந்த எஹெலப்பொல விரைவாக பதவி உயர்வுகள் பெற்று ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கா மன்னரின் ஆட்சியில் அதிகாரியானார். பிலிமத்தலவாவின் இறப்புக்குப் பின் எஹெலப்பொல பதவி உயர்வு பெற்று மகாஅதிகாரானார் . ரதல இனத்தவர்கள் மேல் மன்னனுக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. அவர்கள் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்பது அவரின் எண்ணம் அதனால் அவர்களில் பலருக்கு மரணதண்டனை கொடுத்தார் . ஆனால் எஹலப்போலவின் மேல் அவருக்கு ஒரு பயம். எஹலப்போல தன் புத்தி கூர்மையால் தன்னை மன்னன் பதவியில் இருந்து நீக்கி விடுவானோ என்ற பயம். கண்டி மன்னனுக்கு அழகிய பெண்கள மீது ஒரு சபலம் . அதனால் எஹபோலவின் மனைவி குமாரி ஹாமி மேல் அவரின் பார்வை பட்டது . அனால் அவரின் ஆசை நிறைவேறவில்லை. அவளைப் பழி வாங்க மன்னன் சந்தர்ப்பம் காத்திருந்தான். எஹெலப்போல் தான் மன்னனின் விசுவாசி என்ற தோற்றத்தை உருவாக்கினர் . அவர் மனதில் என்ன திட்டம் இருக்கிறது என்பதை மன்னனால் அறியமுடியவில்லை

கண்டி மன்னனின் அட்டூளிங்களை அறிந்த எஹலப்பொல, பலப்பிட்டிய , களுத்துறை முட்டுவால் ஆகிய மேற்கு கரையோர ஊர்களில் வாழும் தன் இனத்தவரோடு தொடர்பு கொண்டு மன்னனுக்கு எதிரான ஒரு புரட்சிக்கு திட்டமிட்டார் . அவருடைய முக்கிய நோக்கம் கண்டி அரசை நாயக்கர்களிடம் இடமிருந்து கைப்பற்றி தான் மன்னனாவதே. எஹலப்போவுக்கு தெரியாது ப்ரிடிஷ்காரர்களின் திட்டம், அவரைப் பாவித்து கண்டி இராச்சியத்தை கைப்பற்றி முழு இலங்கையையும் தமது ஆட்சிக்குள் கொண்டுவருவது என்பதே அவர்களின் சாணக்கியம் . அனால் எஹெலப்பொலவின் திட்டத்தை ஒற்றர்கள் மன்னருக்கு அறிவித்தனர் .

பெண் பித்து உள்ள மன்னனை “வல் ராஜா” ( கெட்ட ராஜா ) என்று பட்டப் பெயர் சூட்டிமக்கள் ஏளனமாக அழைத்தனர் . பல பெண்கள் அவரின் ஆசைக்கு சம்மதிக்க .மறுத்தால் மரணத்தை தழுவவேண்டி வரும் என்று பயந்து இணங்கினர் .

ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தியின் அடிப்படையில் எஹலப்பொலவை கைது செய்ய மன்னர் கட்டளை இட்டார் . மன்னருக்கு தெரியும் எஹலப்போலவவை கைது செய்வது இயலாத காரியம் என்று, ஏன் என்றால் அவருக்கு ஆதரவானவர்கள் பலர் கண்டி இராச்சியத்தில் இருந்தனர் .எஹலப்போலவும் அடிக்கடி இடம் மாறிக் கொண்டு பிடிபடாமல் இருந்தார் . இறுதியில் எஹலப்போல மஹா அதிகாரி மேற்கு பகுதியை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசை நாடி உதவி கேட்டரர் . அதை தான் பிரிட்டிஷ்காரர்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர் ஆரம்பத்தில் சத்கோரல்லாவுக்கு அதிகாரியாக இருந்து, பின்னர் சப்பிரகமுவவுக்கு அதிகாரியானார். மன்னனின் கொடூர ஆட்சியில் மக்களின் வெறுப்பை அறிந்த எஹெலப்பொல, மன்னனை எதிர்க்க ஒரு விடுதலை போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டார். ஆரம்ப கட்டங்களில் அவர் களுத்துறை. பலபிட்டியவில் முட்டுவாளில் வாழ்ந்தத தனது உறவுகளுடன் தொடர்புகொண்டு அவர்களின் உதவியை நாடினார்

எஹலப்பொலவின் மனைவி குமாரிஹாமியும் , எஹலப்போலவின் உறவினர்களும் கழுத்தில் கல்லைக் கட்டி பொகம்பரா ஏரியில் மூழ்கியடிக்கப் பட்டார்கள் . இது கண்டிய அரசயில் ஒருவர் செய்த குற்றத்ததுக்காக அவரை கைது செய்யமுடியாமல் இருந்தால், . அவரின் முழுக் குடும்பத்துக்கு மரணதண்டனை கொடுப்பது சட்டத்தில் இருக்கவில்லை. ., கண்டி மன்னனின் வீட்டிற்குள் வசிக்கிறவர்களைத் தவிர, மூன்று நாட்களுக்கு கண்டி மக்கள் எவரும் வீட்டில் தீவைத்து சமையல் செய்யவில்லை.
சிங்கள அரசர்களின் நீண்ட வரலாற்றில், இறந்தவர்களின் குழந்தைகளின் தலையைத் தாய்மார்கள் உரலில் போட்டு துவைபது போன்ற எந்த சம்பவமும் பதிவு செய்யப்படவில்லை எனவும், அத்தகைய தண்டனையை அவர்களது சட்டத்தால் அங்கீகரிக்கவில்லை

.எஹெலபோல குமாரிஹாமியின் சிலை அவரது சொந்த ஊரான மாத்தளையில் எஹெல்பொலவில் திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கவின் தாயான சுப்பம்மாவைக் தவிர , கண்டி இராச்சியத்தில் மிக அழகிய பெண்ணாக எஹெலபோல குமாரிஹாமி கருதப்பட்டது. அவர் மகா ஆதிகாரம் கெப்பபிட்டிபொலவின் சகோதரியாவர்

.. பிரிட்டிஷ் ஆளுனர் ஜே. காம்பெல் மற்றும் ஏ. சி. லாரி ஆகியோரின் அறிக்கையின்படி, கண்டிபத் துணைத் தலைவராக எஹேலப்பொல மகா அதிகாரியை நியமிப்பதாக உறுதியளித்திருந்தார்கள், ஆனால் பிரிட்டிஷ் பிரிவினர் பிரித்து ஆட்சி' செய்யும் கொள்கையில் நிபுணர்களாக இருந்தனர்.
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கவை நாடு கடத்தப்பட்டதும், கண்டி கண்டனத்தை கையெழுத்திட்டதும், முழு தீவு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. இந்த பின்னணியில் ஹீரோவும், தலைசிறந்தவரும் எஹெலப்பொலாவை விட தலைவர் ஒருவரும் இல்லை.

எஹெலப்பொவுக்கு பல கௌரவங்களையும் பட்டங்களையும் வாக்குறுதியளித்து பிரிட்டிஷ் அரசு . 1818 ம் ஆண்டுக்கான யுவா கலகம், பிரித்தானிய ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட கொடூரங்களின் விளைவாக, தன்னிச்சையான எழுச்சியைத் தோற்றுவித்தது. எஹெலப்பொலா அவரது சகோதரர் மொனா-ரவிலை கெப்பிபிபோலாவை கலகத்தில் உள்ள பகுதியின் பொறுப்பாளராக நியமித்தார், ஆனால் வரலாறு வெளிவந்தவுடன் அவர் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து அவர்களின் தலைவராக ஆனார்.கிளர்ச்சி மோசமாக ஒழுங்கமைக்கப்பட்டதால் தோல்வியடைந்தது, பிரிட்டனின் நவீன ஆயுதங்களுக்கான எந்தப் போட்டியுமில்லை.
எபெல்லோலா கண்டி அரசரை வெளியேற்றுவதற்கு பிரிட்டிஷார் உதவிய போதிலும், அவர் மிகவும் புத்திசாலி என்பதால் பிரிட்டிஷார் அவரை எப்போதும் சந்தேகிகித்தார்கள். மன்னர் அகற்றப்பட்ட பின்னர், கண்டி பிரித்தானியரை பதவி நீக்கம் செய்ய மன்அனர் ஆனார். எஹெலபோலவுக்கு மன்ன்னுக்கு இருக்கவேண்டிய அனைத்து தகுதிகள் மற்றும் அறிவு இருந்தது ஆனால் பிரிட்டிஷ் அவரை துணை அரசனாக கூட அங்கீகரிக்க தயாராக இல்லை.அவர் இலங்கையில் இருந்தால் தங்களின் ஆட்சிக்கு எதிராக மக்களை தூண்டி விடுவார் என்ற பயத்தில் எஹலபோலவை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மொரேசியஸ் தீவுக்கு 1822 இல் கப்பலில் அவரோடு சில கண்டி அரசின் அதிகாரிகளியும் சேர்த்து பிரிட்டிஷ் அரசு நாடு கடத்தியது . அவர்களுக்கு மொரேசியஸ் தீவின் தலை நகரம் போர்ட் லூயிஸ் (Port Louis) என்ற துறைமுகத்தில் இருந்து வடக்கே 18 மைல் துரத்தில் உள்ள ஆர்செனல் (Arsenal) என்ற ஊரில் ஒரு பெரிய பண்டைய மாளிகையில் வசதிகளோடு அவருக்கும் அவரோடு நாடு கடத்தப் பட்டவர்களுக்கும் வாழ பிரிட்டிஷ் ஒழுங்கு செய்து கொடுத்தது. அவர் மொரேசியஸ் தீவில் வசித்த மாளிகை மாத்தளையில் அவர் வசித்த சொந்த மாளிகை போன்றது. மொரேசியஸ் தீவில் 7 வருடங்கள் வாழ்ந்து வயிற்றுப் போக்கால் பீடிக்கப் பட்டு , 1829 காலமானார் . அவரது உடல் பெளத்த முறைப்படி தகனம் செய்யப்பட்டு சாம்பல் ஒரு பித்தளைக் கிண்ணத்தில் வைத்து அருகே ஒரு மரங்கள் சுற்றயுள்ள சூழலில் புதைக்கப்பட்டு சமாதி ஒன்று நிறுவப்பட்டது . அந்த சமாதியில் “இங்கு தூங்குபவர் கண்டியின் இளவரசன்” என்று சிங்களத்தில் குறிபிட்டு . அவரைப்ப் பற்றி விபரமும் எழுதி இருக்கிறது . பல சுற்றுலாப் பயணிகள் இந்த சமாதியைப் போய் பார்க்கத் தவறுவதில்லை
*****

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (1-May-18, 7:59 pm)
பார்வை : 255

மேலே