1949 இல் நடந்த ஜோன் சில்வா கொலை வழக்கு - Colombo Turf Club Murder

குதிரை ஓட்டப் பந்தயத்துக்கு பழக்கப்பட்டு ஒட்டாண்டியானவர்களின் கதைகள் பலவுண்டு. சூதாட்டம் ஒரு போதை மருந்து போன்றது. 1940 இல் கொழும்பில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் அதற்கு அடிமையார்கள். காரணம் ஊதியம் போதாததால் சுருக்கமான வழியில் வருமானம் பெற முயற்சித்தார்கள். அவர்கள் குதிரைமேல் பந்தயம் கட்டுவதற்கு அதிக வட்டியில் பணம் கடனாகக் கொடுத்து சம்பள நாளன்று அலுவலக வாசலில் அவர்களிடம் பணம் பெற காத்திருப்பார்கள் பட்டாணியர்கள். இந்தப் பழக்கம் சாதாரண ரிக்க்ஷவ் இழுக்கும் தொழிலாளியிடமும் இருந்தது. அவர்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியாவிட்டாலும் இங்கிலாந்தில் நடக்கும் குதிரை பந்தயங்களில் ஓடும் குதிரைகள்.. ஜோக்கிகளின் பெயர்கள் அவர்களுக்கு அத்துப்பாடம் .
****
இலங்கை 1948 சுதந்திரம் பெற்ற அடுத்த வருடம் புத்தளம் அனுராதபுரம் 13 மைல் துரத்தில் காட்டுக்குள் நடந்த கொலை இது. இதன் முக்கிய நோக்கம் கொள்ளை அடிப்பது. கொலை செயப்யப் பட்டவர் 56 வயதுள்ள ஜோன் சில்வா என்ற ஒன்றும் அறியாத அப்பாவி டிரைவர் . இந்தக் கொலை கொழும்பில் குதிரை ஓட்டப் பந்தயம்நடத்தும் கிளப்புடன் (Turf Club) தொடர்பு உள்ள கொலை இது . அக்காலத்தில் ஓடும் குதிரைகளின் மேல் பணத்தைப் பந்தயம் கட்டி சூதாடுவது உயர் மட்டத்து மக்களின் பொழுது போக்கு. அதை பிரிட்டிஷ் ஆட்சியின் போது இலங்கை மக்கள் கற்றவர்கள். . பிரான்சிஸ் என்ற தமிழருக்கு சொந்தமான கொட்டன் ஹால் (Cotton Hall) என்ற குதிரை பல போட்டிகளில் வென்றது . இந்த குதிரைகள் ஒடுவது கொழும்பு 7 இல் ஒரு மைதானத்தில் . அதை நடத்துவது தரை கிளப்(Turf Club)

1949 29ஆம் திகதி சனிக்கிழமை குதிரைகள் ஓடும் இடத்தில் ஒரே கூட்டம். வந்திருந்தவர்களில் கருப்பு வெள்ளையர் என அழைக்கப் பட்ட செல்வம் படைத்த இலங்கையரும் சில வெள்ளை இனத்தவர்களும். பிரிட்டிஷ் இனத்தவரான. கிளப்பின் செயலாளரும் , இலங்கையரான காசாளரும் பந்தயத்தில் சேர்ந்த பணத்தை எண்ணி ஆயிரம் ரூபாய் நோட்டுகளாய் கட்டினார்கள் . அன்று சேர்ந்த பணம் சுமார் 400.000 ரூபாய்கள். பெறுமதி இக்காலத்தில் 5.2 மில்லியன் ரூபாய்கள் பெறுமதி. இந்தப் பணம் 1949 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி சனிக்கிழமை நடந்த குதிரை பந்தயத்தில் சேர்ந்த பணம் .

அடுத்த நாள் ஞாயிறு என்றபடியால் 31ஆம் திகதி திங்கள் கிழமை ஆர்ம்சஸ்டோங் (Armstrong) கராஜில் இருந்து பெரிய சவேர்லாட் கார் z6033 காரில் பாதுகாப்புடன் இன்னொரு கார் பின் தொடரட , கொழும்பு கோட்டையில் உள்ள சார்ட்டேட் வங்கிக்கு வைப்புக்கு எடுத்து செல்வது வழமை.

இந்தப் பணத்தை 1949 31 ஆம் திகதி பணம் வங்கிக்கு கொண்டு போகும்போது கொள்ளையடித்து பகிர எட்டு பேர் திட்டம் போட்டனர் . அவர்கள் முறையே விஜெயதாச , முனசிங்க., சோமரத்னே, பிரேம்லால்,. கில்பர்ட் டயஸ் , மடவியன் , சைமன் டி சில்வா ஜெயசிங்க, ரூபானந்தா ஆகியோராவர் . இவர்கள் 1949 ஆண்டு ஜனவரி 23. 27 ஆம் திகதிகளில் கூடி தமது திட்டத்தை வகுத்தனர்,

ஆர்ம்ஸ்ரோங் கராஜில் 7 பேர் பயணிக்கக் கூடிய சவேர்லாட் z6033 காரையும் அதோடு சேர்த்து சிறிய CE7577 பக்கார்ட் கரையும் , வாடகைக்கு முதல் நாள் ஞாயிறு அமர்த்தினர். சவேர்லாட் z6033 காரை ஓட்டும் டிரைவர் ஜோன் சில்வா. மற்ற காரை எட்டு பேரில் ஒருவர் ஒட்டுவதாக இருந்தது. அவர்கள் திட்டத்தின் படி ஜோன் சில்வா. ஓட்டும் சவேர்லாட் z6033 காரை புத்தளம் அனுராதபுரம் பாதைக்கு எடுத்துச் சென்று காட்டுக்குள் டிரைவரை கொலை செய்து, காரை எட்டு பேரில் ஒருவர் திரும்பவும் கொழும்புக்கு ஓட்டிச், சென்று அடுத்த நாள் திங்கட்கிழமை பணத்தை அந்த காரில் எடுத்து செல்லும் போது வழி மறித்து கொள்ளையடிப்பது அவர்கள் திட்டம் .
*****
ஜனவரி 30, 1949 ஞாயிறன்று, சுமார் பசல் 2 மணிiக்கு , எட்டுபேரில் ஒருவரான ரூபானந்தா என்பவர் ஆம்ஸ்ட்ராங்கின் கராஜூக்கு சென்று Z 6033 ஆறு சீட்டர் கார் ஞாயிறன்று பொய் பெயரில் வாடைக்கு அமர்த்தினார் அந்த காருக்கு டிரைவர் 56 வயதான ஜோன் சில்வா என்பவர். . 6-வது குற்றவாளி ஓய்வு பெற்ற . ஒரு போலீஸ்காரர், . இவர் அடுத்த நாள் பணத்தை எடுத்து செல்லும் போது பாதுகாப்புக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆள்மாறாட்டம் செய்ய நியமிக்கப் பட்டார் . அவர் , ரூபானந்தாவுடன் பின் சீட்டில் அமர்ந்தார். 5-வது குற்றவாளி ஏற்றகனவே ஏற்பாடு செய்தபடி விக்டோரியா பாலத்தடியில் காத்துக் கொண்டிருந்தார். அவர் காருக்குள் ஏறி முன் சீட்டில் ட்ரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்தார். ஜோன் சில்வா கொலை செய்யப்பட்ட பின்னர், 5 வது குற்றவாளியான ஓய்வு பெற்ற இராணுவ டிரைவர், பெரிய காரை ஓட்ட நியமிக்கப் பட்டார்
சிறிய CL. 7577 காரை 2 வது குற்றவாளி ஓட்டினார் மற்றும் 7, 8 ஆவது குற்றவாளிகள் அதில் பயணம் செய்தனர் ஜா-எலாவில் பெரிய கார் Z 6033, சிறிய காரை கடந்து சென்று. புத்தளத்தை மாலை 5 மணியளவில் போயடைந்தது . அவர்கள் மதுஅ ருந்தி இரவு உணவை உண்டனர் . டிரைவர் ஜோன் சில்வா அவர்களோடு கலந்து கொள்ளவில்லை . அதன் பின்னர் ரூபானந்தா, . 6 வது 7 வது மற்றும் 8 வது குற்றவாளிகள் திட்டத்தின் இறுதி விவரங்களை ஜோன் சில்வாவுக்கு கேட்காத தூரத்துக்குச் சென்று சென்று கூடிப் பேசி அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்தார்கள். .
7-வது மற்றும் 8 வது குற்றவாளிகளுடன் சிறிய CL. 7577 கார் முதலில் இருபுறமும் அடர்ந்த காடுகள் கொண்டபுத்தளம்-அனுராதபுரம் பாதையில் சென்று 13 ஆவது மைல் கடந்த பின் வரும் 4 ஆவது சிறு பாலத்தடியில் நிறுத்தி. பெரிய கார் z6033 வரும் வரை காத்திருக்கும் படி அவர்களுக்கு சொல்லப்பட்டது

. சிறிய காரில் இருந்து 7, 8 வது குற்றவாளிகள் கயிற்றையும் , ஒரு வாயு முகமூடியையும் (Gas Mask) வைத்திருந்தார்கள் . காட்டுக்குள் ஜோன் சில்வாவை அழைத்து சென்று ஒரு மரத்தோடு கட்டி பலாத்காரமாக வாயு முகமுடி வஅணிவித்து கொலை செய்தார்கள் அவர் கொலை செய்த போது 5ஆம் .7ஆம் .8.ஆம் குற்றவாளிகளும் ரூபானன்தாவும் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இருந்தாக ஆரசு தரப்பு வக்கீல் சொன்னார். 6 ஆவது குற்றவாளி பாதை ஓரத்தில் கார் அருகே நின்றாலும் அவரும் கொலை திட்டத்துக்கு உடந்தையாக இருந்தர் என்பது அரசு தரப்பு வாதம்
ஜோன் சில்வாவின் உடல் ஜனவரி 3 ஆம் திகதி சிதைந்த நிலையில்கண்டேடுக்கப் பட்டது .
திங்கட்கிழமை கொள்ளை அடித்த பணத்தை எட்டு பேருக்கு இடையே பங்கு போடுவதில் பிரச்சனை ஏற்றுபட்டது. அந்த கூட்டத்ல் ஒருவர் ஒருவர் தனது பங்கு குறைவு என்று கோபத்தோடு போய் போலிசுக்கு கொலை பற்றிய விபரம் சொன்னார். அதுவே போலீசுக்கு ஜோன் சில்வாவின் உடலை நான்கு நாட்களுக்கு பின் காட்டுக்குள் கண்டுபிடிக்க முடிந்தது. .கொலை நடந்த இடம் பற்றிய விபரம் போலீசுக்கு தெரிந்திருக்காவிட்டால் உடலை கண்டு பிடித்திருப்பது கடினம். கொள்ளை நடந்தவுடன் அதைப் பபற்றி துப்பு தருபவர்களுக்கு 20,000 ரூபாய் நன்கொடையகவும், ஜோன் சிவா கொலை செய்ய பட்டார் என அறிந்த பின் 50,000 ரூபாய் நன்கொடையாக தருவதாக போலீஸ் அறிவித்தது. இதை அறிந்து எட்டு பேரில் ஒருவர் போலீசுக்கு விபரம் கொடுபார் என்று போலீஸ்எதிர்பார்த்தது. அதன் படியே நடந்தது.

எட்டு குற்றவாளிகள் மேல் வழக்கு பதிவு செய்து 25 நாட்கள் கேஸ் நடந்தது. 100 பேர் சாட்சியமளித்தனர் கொலையில் நேரடியாக ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது இருவருக்குப் போதிய ஆதரராமில்லாததால் குற்றவாளிகள் பட்டியலை இருந்து நீக்கப் பட்டனர். மற்ற நான்கு குற்றவாளிகளுக்கு நீண்ட கால் சிறைவாவசம் கொடுக்கப்பட்து.

ஜோன் சில்வாவின் உடலைப் பரிசோதித்து ஜனவரி 30, 1949 ஞாயிறன்று மாலை 6 க்கும் 7 க்கும் இடையில் இறந்தார் என்று டாக்டர் சொன்னார் .
இந்த கொலைக்கு நடந்து அடுத்த வருடம் இலங்கையில் குதிரை ஓட்டத்தை அறிமுகப் படுத்தியவரின் மகன் S W R D பண்டாரநாயக்கா பிரதமரான போது 1950 இல் தடை செய்தார்

****

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (4-May-18, 5:22 am)
பார்வை : 76

மேலே