சுத்தமான வாழ்வை அமைப்போம்
வீட்டின் வாசலில் படுத்து கொண்டு
கனவில் தன் நண்பர்களோடு உரையாடி கொண்டு இருக்க தண்ணீர் மழை தீடீரென அவன் கனவை கலைத்தது.
அவன் சகோதரி மாலா.என்னடா?தூக்கத்துல யார் கூட பேசிட்டு இருந்த?என் கேலியாக பேசிட்டே நேரம் ஆச்சு பள்ளி கூடம் போகனும்.எழுந்து போ.என எழுப்பினாள்.பாலாவும் எழுந்து பள்ளி செல்ல புறப்பட்டான்.ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன்.அவர்கள்
அப்பா ஒரு ஆசிரியர்.அம்மா வீட்டோடு இருப்பவர்.அவர்கள் வீட்டில் ஒரு பழக்கம்.வாரம் ஒரு முறை வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.வீட்டில் இருக்கும் அனைவரும்.
ஆசிரியர் நல்ல பழக்கம் இது.சுத்தம் செய்யும் போது பழமொழி, வார்த்தை விளையாட்டு, திருக்குறள் என குழந்தைகள் ஒன்றை சொல்லி விளக்கம் தர வேண்டும்.இதில் ஆர்வம் மிகுந்து இருவரும் போட்டி போட்டு பயன் பெறுவர்.
அன்று பள்ளி கூடத்தில் குறள் போட்டி, கவிதை, கட்டுரை என மாநில அளவிலான போட்டிகளில் கலந்து பரிசும் பெற்றனர்.வீட்டில் தன் தந்தை வழியே சென்று தன் பாட புத்தகங்களை படிப்படோடு பொது அறிவு, பொதுமறை,செய்யுள் நூல்களை படிக்கலாம்.விளக்கம் தெரிந்து நல்ல வழிகளை பின்பற்றலாம்.அவை மட்டும் அல்ல செய்முறை விளக்கம், மற்ற மொழி நூல்கள் என படிக்க ஆர்வம் காட்டினார்கள்.
வீட்டை சுத்தம் செய்யும் வாரத்தின் ஒரு நாள் வந்தது.பாலா,மாலா இருவரும் அன்று தயாராக இருந்தனர்.வழக்கம் போல இன்று இல்லாமல் வீட்டை சுற்றி சுத்தம் செய்வதோடு நம் தெருவையும் சுத்தம் செய்வோம் என கூறினார்.
பாலாவும், மாலாவும் அதை பெரிய வேலை போல் கருதாமல் சரிபா. என வேலையை செய்ய தொடங்கினர்.
அன்றைய பழமொழி
"சுத்தம் சோறு போடும்"என கூறி கொண்டே வேலையை செய்து
கொண்டிருந்தனர்.
அந்த தெருவை ஆசிரியர், அவர் குழந்தைகளும் செய்வதை கண்டு தெருவில் இருப்பவர்கள்.
நீங்கள் ஏன் செய்கின்றீர்கள்? வேலை செய்பவர்கள் வருவார்கள் அல்லவா?என் ஆசிரியர் பார்த்து கேட்கும் போது அவரோ, நாம் வாழும் இடம் வீடு,தெரு, ஊர் சுத்தமாக வைக்க யாரை எதிர் பார்க்கனும்.
என் குழந்தைகள் இப்போது இருந்தே நம் இடத்தையும் நம்ம சுற்றி இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என விழிப்புணர்வு வேண்டும்என கூறினார்.
அவரின் பேச்சு கேட்டு ஊர் மக்கள் தங்கள் குழந்தைகளோடு வாரம் ஒரு முறை ஊரை சுத்தம் செய்யும் வழக்கதோடு பொது அறிவையும் தமிழில் ஆர்வத்தையும் வளர்த்து கொண்டனர்..
ஊரையே தூய்மை நிறைந்ததாய்
மாற்றியதோடு, கல்வி அறிவில்
ஊர் மக்கள் அனைவருக்கும் புகுத்திய
ஆசிரியருக்கு பாராட்டும் வாழ்த்தும்
கிடைத்தது.
ஆசிரியர் பிறகு முன் உதாரணமாக
வாழ்ந்தார்.