முதலீடு

has M
April 18 at 12:21pm ·
அட்சய திருதியை - தங்கம் வாங்கி கொண்டாடுங்கள் - அதற்கு முன் நான் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்.
இந்தியாவில் இறக்குமதி அதிகம் ஆகும் பொருட்களில் கச்சா எண்ணெய்யை அடுத்து நிற்கும் இறக்குமதி பொருள் தங்கம்... 2016 ஆம் ஆண்டுக் கணக்கின் படி ஏறக்குறைய 2,35,000கோடிக்கு.... நன்கு புரிந்து கொள்ளுங்கள் லட்சம் கோடி - (2,35,000,000,000,000) தங்கம் மட்டும் இறக்குமதி செய்கிறோம். உலக அளவில் அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் என்றுமே முதல் 5 இடத்திற்குள் எப்போதுமே இருக்கிறோம். 2016ஆம் ஆண்டு 550 tonnes தங்கம் இறக்குமதி செய்த நாம் - 2017ல் மிகக் கொடூரமாக 846 tonnes இறக்குமதி செய்துள்ளோம்.
சுவிஸ் , ஹங்காங் இரண்டு அதிகப்படியான இறக்குமதி செய்கின்றன. ஆனால் தங்கம் இறக்குமதி செய்து அதை ஆபரண தங்கமாக மாற்றி ஏற்றுமதியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறுகிறார்கள்.. அந்த வகையில் இது நலல் விசயமே. ஆனால் நாம் தங்கள் இறக்குமதி செய்வதும் ஏற்றுமதி செய்வதும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. எனவே மக்கள் மிகக் கொடூரமாக தங்கத்தை விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.
இது நாட்டிற்கும் வீட்டிற்கும் கொஞ்சம் கூட நல்ல விசயமே இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து...
---------------------------------------------------------------
இது நல்ல முதலீடு என்று சிலர் கூறுகிறார்களே???
தற்காலத்தில் தங்கம் நிச்சயம் நல்ல முதலீடு இல்லை. கூறுங்கள் முதலீடு என்றால் என்ன???? நாம் இன்று ஒரு இடத்தை வாங்கி போடுறோம் - மதிப்பு 1 லட்சம்... அடுத்த 1வருடத்தில் அதன் மதிப்பு 1.20 லட்சம் என்றால் நமது முதலீட்டின் மதிப்பு 20% உயர்ந்துள்ளது.. அப்போது நமக்கு ரிட்டன் எப்படியும் வரி எல்லாம் போக 15% கிடைக்கும். இது ஊர் அளவிற்கு நல்ல முதலீடு. சரி தானே. அதாவது நாம் முதலீடு செய்த ஒரு பொருளின் விலை ஏற்றம் கண்டு - அதன் மூலம் எவ்வளவு நமக்கு ரிட்டன் கிடைக்கிறதோ அதைப் பொறுத்து தான் நல்ல முதலீடா இல்லையா என்று கூற முடியும். இது புரிகிறதா? வங்கிகளில் fixed deposit என்று போட்டு வைத்தால் அதற்கு 7.25% முதல் 8% வரை ரிட்டன் கிடைக்கும்.
ஆனால் இந்தத் தங்கத்தின் கடந்த 8வருட மதிப்பைக் கொஞ்சம் எடுத்துப் பாருங்கள் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. 2011ல் சராசரியாக 27,000ரூபாய்க்கு விற்ற தங்கம் இன்று சராசரியாக 29,000என்று விற்கிறது. இடையில் 2013, 2014 , 2015 என்று எல்லா வருடமும் ஏறக்குறைய எந்த முன்னேற்றமும் இல்லை. ஆக 6 முதல் 7% ரிட்டன் மட்டுமே தரக்கூடியதாக உள்ளது. மேலும் இதில் செய்கூலி , சேதாரம் என்று கணக்கிட்டு கழித்தால் எந்த லாபமும் கிடையாது இந்த முதலீட்டில். இது தான் நிதர்சன உண்மை.
இதில் இருக்கும் இன்னொரு ஆபத்து அதிகம் திருடர்களுக்கு மிக எளிய இலக்கு தங்கம் தான். பெரிய அளவில் திட்டம் போட்டுக் கஷ்டம் எல்லாம் பட தேவை இல்லை - அதனால் தான் செயின் பறிப்புகளும் அதிகமாகி விட இந்தத் தங்கம் ஏறக்குறைய ஆபத்தான முதலீடாகவும் விசயமாகவே மாறிவருகிறது.
இது போக இதற்கு லாக்கர் செலவு செய்தி சிலர் வைப்பது எல்லாம் சுத்த முட்டாள்தனமே ஒழிய வேறு இல்லை.
{கழுத்து நெறைய நகையை போட்டுக்கொண்டு ஜங்கு ஜங்குன்னு கல்யாணத்திற்கு வருவதில் என்ன பெரிய பெருமை அழகு இருக்கு என்று எனக்கு எப்போதுமே புரிவது இல்லை. அடுத்தவரை மிரட்டுவது போல் உள்ளது - பார் நான் எவ்வளவு பெரிய வசதியாக வாழ்கிறேன் என்று மிரட்ட விரும்புகிறீர்!! }
-------------------------------------------------------------------
நாட்டிற்கு இது எப்படி கேடு என்கிறீர்????
இந்தியாவைப் பொறுத்தவரை முடிந்த அளவு இறக்குமதியைக் குறைக்க வேண்டும் - முதல் இடத்தில் இருப்பது கச்சா எண்ணெய். அதைக் குறைக்க மாற்று எரிபொருளை சிந்திக்கிறோம். உள்நாட்டில் கிடைக்கும் எரிவாயுக்களை எடுக்கும் பணியை விரைவிடுபத்துகிறோம்.
மூன்றாவது எலெக்ட்ரானிக் பொருட்கள். இவையும் உயல்நாட்டில் உற்பத்தித் திறனை மேம்படுத்த அரசு கவனம் செலுத்துகிறது.. நான்காவது இடத்தில் இருக்கும் ராணுவ தடவாளங்கள் இடக்குமதியும் உள்நாட்டில் உற்பத்தி ஆகும் வகையில் make in india திட்டம் கொண்டு விரைவு படுத்துகிறார்கள். சுமார் 570நிறுவனகள் கடந்த சில வருடங்களில் உள்நாட்டில் ஆயுதங்கள் ராணுவம், காவலருக்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளன.
இந்த வகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தத் தங்கத்தை இறக்குமதி செய்ய ஒரே காரணம் மக்கள் மக்கள் மக்கள் தான். இவர்கள் மிகக் கொடூரமாக தங்கத்தை விடும்புவது தான்.
இதை ஏன் நான் மிக கவலை படவேண்டிய விசயமாக கூறுகிறேன் என்றால் - அதிகபடியான இறக்குமதி என்பது எந்தவித்திலும் நாட்டிற்கு நல்லது அல்ல. அது எலக்ரானிக் பொருட்கள் என்றாலும் சரி கச்சா எண்ணெய் என்றாலும் சரி தங்கம் என்றாலும் சரி. மற்ற கச்சா எண்ணெய், எலெக்ட்ரானிக் பொருட்கள் கதை வேறு அவை நிறுவனங்கள் உற்பத்தி துறைகளில் உதவவும் செய்கின்றன. ஆனால் இந்த தங்கம்???? 92% வெட்டியா உங்கள் வீட்டில் , வங்கி லாக்கரில் உறங்கும் குணம் கொண்டது- மீதம் 8% மட்டுமே உற்பத்தி துறையில் தேவை படுகிறது. எந்த பயனும் நாட்டிற்கு கிடையாது. மாறாக அதிகபடியான இறக்குமதியால் நமது பெரும் பகுதி பணம் நம் நாட்டை விட்டு வெளியே செல்கிறது. அதனால் பணத்தின் மதிப்பு பெரும் பாதிப்பை இந்த தங்கம் இறக்குமதி செய்வதால் நாடு சந்திக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு நாசம் செய்வதே இந்த தங்கம் தான்.
சரி தங்கத்தில் தான் முதலீடு செய்வேன் என்று நீங்கள் அடம் பிடிக்க... உங்களுக்குத் தங்கம் தான் சரியான முதலீடு என்று தோன்றும் பட்சத்தில் பிரதமர் மோடி அவர்கள் government gold bond திட்டங்களை அறிமுகம் செய்தாரே.. அரசின் தங்க பத்திர திட்டம் மூலம் நீங்கள் முதலீடு செய்தாலும் தங்கம் வாங்கி வைத்தாலும் அதே தானே???? ஆனால் அதுவும் நல்ல வரவேற்பு இல்லை.
இப்படி இருந்தால் அந்த ஆண்டவனே வந்தாலும் இந்த நாட்டைக் காப்பாற்றுவது கடினம்..
--------------------------------------------------------------------
முதலீட்டுத் திட்டங்களை எப்படி தான் திட்டமிடுவது ????
நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் எந்த திடீர் மருத்துவ செலவும் உங்கள் மொத்த முதலீட்டையும் தின்றுவிடும். எனவே அதற்கு முதலில் மருத்துவ பாதுகாப்பிற்கு இன்சூரன்ஸ் கட்டாயம் எடுத்துக் கொள்ளவும். அதே போல ஒரு நல்ல குடும்ப தலைவன்/தலைவிக்கு இருக்க வேண்டிய குணம் நாம் திடீர் என்று இறந்தாலும் நமது குடும்பம் பொருளாதார சிரமத்தை எதிர்கொண்டு விடக் கூடாது. அந்த financial stabilityக்கும் திட்டம் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த இரண்டும் முதல் அவசியமான விஷயம்.
அடித்துத் தான் முதலீட்டு விஷயம். நலல் ரிட்டன் இருக்கவேண்டும் என்னும் அதே நேரம் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் - Mutual Fund , Equity Shares,Company Fixed Deposits , அரசுகடன் பத்திரங்கள் . என்று தேடி முதலீடு செய்ய பழகுங்கள். இது ஒரு நாட்டின் குடிமகனாகவும் அவசியமான பொறுப்பான விஷயம்.
mahindra , DHFL , Bajaj போன்ற நிறுவனங்களின் Company Fixed Deposits எல்லாமே 10% வரை ரிட்டன் தரும் போது ஏன் முயற்சிக்கக் கூடாது? அதே போல நல்ல ஆரோக்கியமான தேடி சூதாட்டம் போல் இல்லாமல் ஒரு long term share investment செய்வது மிக ஆரோக்கியமான விஷயம் தான். அதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். அரசு விளம்பரம் செய்கிறது மக்கள் மீச்சுவல் பண்ட் முதலீடு செய்யுங்கள் என்று அதைத் தயவு கூர்ந்து என்ன என்று கேளுங்கள்..L&T , Reliance ,HDFC என்று பல நிறுவனகளின் ரிட்டன் மிக திருப்திகரமாக உள்ளது.. 15% முதல் 30% வரை ரிட்டன் கிடைக்கிறது. நாடும் ஆரோக்கியமான பாதையில் நல்ல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை மூலம் மேல் நோக்கிச் செல்வதால் நிச்சயம் நலல் எதிர்காலம் இவற்றிற்கு உண்டு.
----------------------------------------------------------------------
Mutual Fundக்கும் Sharesக்கும் என்ன வித்தியாசம்????
மிக எளிமையாகக் கூறினால் நீங்கள் infosys என்ற ஒரு நிறுவனத்தில் அது வளர்ச்சி அடைய அதிக லாபம் அடைய வாய்ப்புள்ளதாக நினைத்து அந்த நிறுவனத்தின் சேர் மட்டும் வாங்கி அதில் முதலீடு செய்வது share.. அதே ஒரு நிறுவனமாக இல்லாமல் உங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வங்கிகள் அல்லது நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் என்று இல்லாமல் துறை சார்ந்த நல்ல நிறுவனங்கள் பலவற்றில் முதலீடு செய்வது ஆகும். இதன் மூலம் ரிஸ்க் பெரும் அளவு குறைக்கப்படுகிறது.
சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என்று கூறுகிறார்களே ???
நீங்கள் வாழ்வது ரிஸ்க் தான். வருடம் வருடம் 150,000 பேர் சாலை விபத்தில் இறக்கிறார்கள். மொத்த சாலை விபத்தில் 23.2% விபத்து நடப்பது பைக் ஓட்டுபவர்களால் தான். ஒவ்வொரு மணி நேரமும் குறைந்தது 17 பேர் சாலை விபத்தில் இறக்கிறார்கள். 10ல் 9பேர் பைக் வைத்திருப்போர் கட்டாயம் சின்ன விதமான விபத்தையாது சந்திக்கிறார்கள்.
உங்கள் வீட்டு படிக்கட்டுகள் இருக்கு அல்லவா அது மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 28,00,000 மக்களைத் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்புகின்றன. அதில் 36% ஆண்கள், 64% பெண்கள் விழுவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும் ஒல்லியாக இருப்பவர்கள் தான் விழுவதற்கு அதிகம் சாத்திய கூறு உண்டு. இப்படி நிறையா புள்ளிவிவரம் கூறமுடியும் நீங்கள் வாழ்வதே அதிஷ்டம் என்னும் அளவுக்கு. எனவே ரிஸ்க் இருக்கவே செய்கிறது எல்லா விசயத்திலும். அந்த வகையில் இதிலும் உண்டு. அவ்வளவு தான். வங்கிகள் திவால் ஆனா கூடத் தான் உங்கள் பணம் திரும்பக் கிடைக்காது. எனவே நிறைய பயப்படத் தேவை இல்லை. தங்கத்தை வாங்கி வைத்துப் பயந்து வாழ்வதை விட இது ரிஸ்க் குறைவு.
--------------------------------------------------------------------------
இறுதியாக :
பிரதமர் எதற்கு நாடு நாடாகச் சென்று முதலீட்டை இந்தியாவிற்கு ஈர்க்க வேண்டும்???? தொழில் துறை வளர்ச்சி அடைவதற்கு. தொழில் துறை வளர்ச்சி என்பது வேலைவாய்ப்பை அதிகம் ஆக்கும். அதன் மூலம் சமூகத்தில் நல்ல பணப்புழக்கம் உருவாகும். நீங்கள் ஆரோக்கியமான முதலீட்டு முறைகளைத் தேர்வு செய்தால் தொழில் துறைக்கு உங்கள் முதலீட்டு மூலமே பெரும் தொகை முதலீடாகக் கிடைக்குமே. நம் நாடு , நாமும் கொஞ்சம் பொறுப்புடன் இருக்கே வேண்டும். நாடு நலமாடைந்தால் நாமும் வளர்ச்சி அடைவோம் என்று சிந்திக்கவும்.
நான் கேட்டுக் கொள்வது இது தான் - முதலீட்டைச் சரியாக ஆரோக்கியமாகச் சிந்திக்கவும். ஒரு நல்ல முதலீடு நாட்டையும் வீட்டையும் முன்னேற்றும். நன்றி.
- மாரிதாஸ்

எழுதியவர் : மாரிதாஸ் (4-May-18, 8:38 am)
சேர்த்தது : vaishu
Tanglish : muthaleedu
பார்வை : 233

மேலே