தேடல்
உனக்குள் நான்
எதைத் தேடுகிறேன்?...
உன் பார்வையில்
பரிகொடுத்த என்
இதயத்தையா?
உன் பேச்சில்
சுவாசிக்க மறந்த
எந்தன் மூச்சுக் காற்றையா?
உன் அருகில்
உன் அணைப்பில்
உன்னிதழ் இணைப்பில்
தொலைத்த என்னையா?....
உன் நினைவெனும் மரத்தில் மலர்ந்து உதிர்ந்த என் உயிரையா?
எதை நான் தேடுகிறேன்
உன்னிடத்தில்?
கடவுள் போல் நீ
ஒரு பக்தை போல் நான்
கடைசிவரை தேடிக்கொண்டே இருக்கிறேன்
உன்னிடத்தில் என் காதலை!....