கை விட மாட்டேன்

கண் காணா தேசத்தில்
வசிக்கும் என் வாசக் காற்றே
என் சுவாசக் காதலியே!
மண்ணில் விழும்
உன் ஒரு துளி
கண்ணீர் துளி கூட
என் ஒட்டு மொத்த
உயிரையும் ஒரே வாயாக
பிசைந்து விழுங்கி விடுகின்றதடி

என்னை விட அதிகமாக
என்னை நேசிக்கும் உன்னை
விட்டு நான்கு எங்கு
சென்று வாழ்ந்திட
அவ்வாறு செய்தால் அது
நான் வீழ்ந்திட வழி வகுக்குமே
உன் மேல் அலாதியான
அன்பு வைத்த நான் உன்
கைகளையும் விட மாட்டேன்
உன்னையும் கை விட மாட்டேனடி......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (5-May-18, 2:41 pm)
Tanglish : kai vida maaten
பார்வை : 60

மேலே